ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் பெங்களூரு அணிக்கு வெற்றி

Saturday, 17 October 2020 - 19:21

%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
இந்தியன் ப்றீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியுடன் நேற்றிரவு இன்று பகல் இடம்பெற்ற போட்டியில், பெங்களூரு ரோயல் செலஞ்சர்ஸ் அணி 07 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

ஐ.பி.எல் தொடரின் 33 ஆவது போட்டியாக டுபாயில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அந்த அணி சார்பாக அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 57 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதோடு, ரொபின் உத்தப்பா 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்துவீச்சில் கிரிஸ் மொரிஸ் 4 விக்கெட்டுக்களையும், சஹால் இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 178 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 19.4 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஏபி டிவில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 22 பந்துகளில் 55 ஓட்டங்களையும் அணித்தலைவர் விராட் கோலி 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் கோபால், தியாகி மற்றும் தேவடியா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக ஏபி டிவில்லியர்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.