சென்னை அணியுடனான போட்டியில் டெல்லி அணி 5 விக்கட்டுக்களினால் வெற்றி (காணொளி)

Sunday, 18 October 2020 - 7:18

%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+5+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் சென்னை சுப்பர்கிங்ஸ்க்கு எதிரான போட்டியில் டெல்லி கெப்பட்டல்ஸ் அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

சார்ஜாவில் இடம்பெற்ற இந்த போட்டியில், நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சுப்பர்கிங்ஸ் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய சென்னை சுப்பர்கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

இந்தநிலையில், 180 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய டெல்லி கெப்பட்டல்ஸ் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை மாத்திரமே இழந்து போட்டியின் வெற்றியிலக்கை கடந்தது.

டெல்லி அணி சார்பில் சீர்க்கர் தவான் ஆட்டமிழக்காது 101 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததோடு, போட்டியின் ஆட்டநாயகனாகவும் தேர்வானார்.