“800” திரைப்படத்தில் இருந்து திடீரென விலகிய விஜய் சேதுபதி

Tuesday, 20 October 2020 - 6:33

%E2%80%9C800%E2%80%9D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF
முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக உள்ள ‘800’ படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகி உள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படம் உருவாகவுள்ளது.

ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்திற்கான எதிர்ப்பும் அதிகரித்தது.

படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள் இல்லை என 800 படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே உறுதி அளித்தது.

இருப்பினும் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு முத்தையா முரளிதரன் ஆதரவளித்தவர் என்பதால் படத்தில் நடிக்கும் முடிவை விஜய் சேதுபதி கைவிட வேண்டும் என பல்வேறு தரப்பினராலும் விஜய் சேதுபதிக்கு அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த படத்திலிருந்து அவர் விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.







Exclusive Clips