டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளை குழப்பும் ரஷ்யா..!

Tuesday, 20 October 2020 - 20:03

%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B+%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE..%21
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளை குழப்பும் நோக்கில் ரஷ்யா சில நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பிரித்தானியா குற்றம் சாட்டியுள்ளது.

ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் அமைப்புக்களின் இணையத்தளங்களின் ஊடாக உளவு ஊருடுவல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிருத்தானிய வெளிவிவகார செயலகம் தெரிவித்துள்ளது.

இந்த வருட டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகள் 2021 ஆம் ஆண்டிற்கு பிற்போடப்பட்ட வேளையிலேயே ரஷ்யா இந்த சட்ட விரோத செயலில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்ய புசுரு இராணுவ புலனாய்வு பிரிவினர் இந்த நடவடிக்கைகளின் பின்னணியில் செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும், பிருத்தானியாவினால், உளவு ஊருடுவல் தொடர்பான விபரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை.

அதேவேளை, இந்த விடயம் குறித்து அமெரிக்காவும் சில தகவல்களை வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவின் மூலோபாய நன்மையை கருத்தில் கொண்டு ஆறு ரஷ்ய புசுரு புலனாய்வு தரப்பினர் உளவு ஊருடுவலில் ஈடுபட்டதாக அமெரிக்க நீதித்துறை ராஜாங்க தரப்பு தெரிவித்துள்ளது.







Exclusive Clips