இலங்கை-தென்னாபிரிக்க டெஸ்ட் தொடர் உறுதியானது

Tuesday, 27 October 2020 - 16:47

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81
இலங்கை கிரிக்கட் அணி டெஸ்ட் கிரிக்கட் தொடரில் பங்கேற்பதற்காக, தென்னாப்பிரிகாவிற்கு செல்கிறது.

கிரிக்கட் தென்னாப்பிரிக்கா இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கட் அணிகள், உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப் கிரிக்கட் தொடரின் கீழ் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மோதவுள்ளன.

இதன் முதலாவது டெஸ்ட் போட்டி சென்சூரியனில் டிசம்பர் மாதம் 26ம் திகதி நடைபெறவுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 3ம் திகதி முதல் 7ம் திகதி வரையில் ஜொஹானெஸ் பார்க்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.







Exclusive Clips