முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று-இலங்கை அணி 156 ஓட்டங்கள்

Saturday, 16 January 2021 - 20:20

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+156+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
இலங்கை அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நிறைவடைந்தது.

காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில், தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடும் இலங்கை அணி, இன்றைய ஆட்டநேர முடிவில், 2 விக்கட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இங்கிலாந்து அணி, தமது முதல் இன்னிங்ஸில் 421 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

முன்னதாக இலங்கை அணி, தமது முதல் இன்னிங்ஸில் 135 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இந்த நிலையில், இங்கிலாந்து அணியை விடவும் இலங்கை அணி 130 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.