இலங்கை இளம் டென்னிஸ் வீரர்களுக்கு உதவ தயார் - ரொஹன் போபண்ணா தெரிவிப்பு...!

Wednesday, 20 January 2021 - 13:19

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+-+%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...%21
இலங்கை இளம் டென்னிஸ் வீரர்களுக்கு உதவ இந்திய டென்னிஸ் வீரர் ரொஹன் போபண்ணா ஆர்வம் வெளியிட்டுள்ளார்.

இந்திய டென்னிஸ் வீரர் ரொஹன் போபண்ணா, டென்னிஸ் மீது வைத்திருக்கும் ஆர்வத்தையும் அன்பையும், எதிர்காலத்தில் இளைஞர்களை வளர்ப்பதில் அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் காணும்போது மகிழச்சியளிப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இலங்கையின் எதிர்கால டெனிஸ் வீரர்களுக்கு ஆதரவை வழங்குமாறும் அவரிடம் கோரியிருந்தார்.

இதற்கு பதில் வழங்கியுள்ள இந்திய டென்னிஸ் வீரர் ரொஹன் போபண்ணா, இலங்கையிலும் ஒரு நல்ல டென்னிஸ் திட்டத்தை உருவாக்க உதவுவேன் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, விளையாட்டின் மீது காட்டும் ஆர்வத்தையும் பாராட்டுவதாக இந்திய டென்னிஸ் வீரர் ரொஹன் போபண்ணா, குறிப்பிட்டுள்ளார்.







Exclusive Clips