இலங்கை அணியின் தோல்வி குறித்து மிக்கி ஆர்தர் கவலை!

Monday, 08 March 2021 - 15:16

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%21
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது போட்டிகளில் தோல்வியடைந்தமை தொடர்பில் தான் மிகவும் வருந்துவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சிரேஷ்ட வீரர்கள் பங்குபற்றாமையானது போட்டியில் நாம் தோல்வியடைவதில் தாக்கம் செலுத்தியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இருபதுக்கு இருபது போட்டிகளில் இரண்டுக்கு ஒன்று என்ற அடிப்படையில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிபெற்றதுடன், இன்று இடம்பெற்ற இருபதுக்கு இருபது இறுதிப் போட்டியில் 3 விக்கெட்டுகளால் மேற்கிந்திய தீவுகள் வெற்றிபெற்றிருந்தது.

இதேவேளை, இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் போட்டிகள் நாளை மறுதினம்(10) ஆரம்பமாகவுள்ளன.

Exclusive Clips