மீண்டும் ரோயல் செலஞ்சர்ஸில் இணைந்தார் படிக்கல்! (காணொளி)

Wednesday, 07 April 2021 - 17:33

%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தேவ்தத் படிக்கல் மீண்டும் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அவ்வணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் 21 ஆம் திகதி தேவ்தத் படிக்கல் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் எனக் கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த அவர், தொற்றிலிருந்து விடுபட்டு முற்றாக குணமடைந்ததைத் தொடர்ந்து இன்று மீண்டும் சென்னையிலுள்ள ரோயல் செலஞ்சர்ஸ் குழாமில் இணைந்துள்ளார்.

இந்நிலையில், ரோயல் செலஞ்சர்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் படிக்கலின் காணொளி செய்தியொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தான் குணமடைவதற்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.Exclusive Clips