தென்ஆபிரிக்காவை வென்றது பாகிஸ்தான்!

Wednesday, 07 April 2021 - 22:40

%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%21
சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் பாகிஸ்தான் அணி 28 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

செஞ்சூரியனில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 320 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில், 321 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய தென்னாப்பிரிக்க அணி 49.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களை இழந்து 292 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

அதற்கமைய ஒரு நாள் சர்வதேச தொடரை 2க்கு 1 என்ற அடிப்படையில் பாகிஸ்தான் தனதாக்கி கொண்டது.

Exclusive Clips