ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் 6 ஓட்டங்களால் வெற்றி!

Wednesday, 14 April 2021 - 23:06

%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D+6+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%21
14 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 6 ஆவது நாளான இன்று(14) பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்து முதலில் துடுப்பாடுமாறு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணியை பணித்தது.

அதற்கமைய, முதலில் துடுப்பாடிய பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்தாடிய சன்ரைசரஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

இந்நிலையில், இந்த தொடரில் இதுவரையில் பெங்களுர் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

துடுப்பாட்ட சுருக்கம்

பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ்: மெக்ஸ்வெல் (59), விராட் கோலி (33)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டேவிட் வோனர் (54), மனிஸ் பாண்டே (38)

பந்துவீச்சு சுருக்கம்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ஜேசன் ஹோல்டர் (30- 3), ரஷீட் கான் (18- 2)

பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ்: ஷபாஸ் அஹமட் (7 - 3 விக்கெட்), மொஹமட் சிராஜ் (25- 2), ஹர்ஷல் பட்டேல் (25 -2)







Exclusive Clips