தமது வீரர்களை இந்தியாவில் அநாதரவாக விட்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட்

Tuesday, 04 May 2021 - 18:33

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D
இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர் பிற்போடப்பட்டுள்ள போதும், தற்போது இந்தியாவில் தங்கியுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை நாட்டுக்கு அழைப்பதற்கான சலுகைகள் எதனையும் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரப்போவதில்லை என்று அவுஸ்திரேலிய கிரிக்கட் அறிவித்துள்ளது.

கொவிட்19 பரவல் தீவிரநிலைமை காரணமாக, இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். தொடர் இடைநடுவில் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.

இதனை வரவேற்றுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கட் நிறுவனமும், அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர்கள் ஒழுங்கமைப்பும் கூட்டறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளன.

இதன்படி, மே மாதம் 15ஆம் திகதி வரையில் இந்தியாவில் இருந்து நேரடி விமானங்களை அனுமதிப்பதில்லை என்ற அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தீர்மானத்தை மதித்து நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்தியாவில் தங்கியுள்ள அவுஸ்திரேலிய வீரர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்கான விசேட சலுகைகள் எதனையும் தாங்கள் அரசாங்கத்திடம் கோரப்போவதில்லை என்றும் அந்த நாட்டின் கிரிக்கெட் நிறுவனமும், கிரிக்கட் வீரர்கள் ஒழுங்கமைப்பும் அறிவித்துள்ளன.

எவ்வாறாயினும், இந்தியாவில் தங்கியுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் அவுஸ்திரேலிய அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்கு கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exclusive Clips