ஐ.பி.எல் எஞ்சிய போட்டிகள் எப்போது? - சற்றுமுன் வெளியான தகவல்

Tuesday, 04 May 2021 - 19:34

%E0%AE%90.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%3F+-+%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
இடைநிறுத்தப்பட்டுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் அளவில் நடத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கொவிட் 19 பரவல் நிலை காரணமாக 2021ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடர் இடைநடுவில் நிறுத்தப்படுவதாக இன்றையதினம் அறிவிக்கப்பட்டது.

எனினும் இந்தியாவின் கொவிட் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, வெளிநாட்டு வீரர்களும் பங்குகொள்ள சம்மதித்தால், இந்த தொடரின் எஞ்சியுள்ள 31 போட்டிகளையும் செப்டம்பர் மாதம் நடத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

20க்கு20 உலகக்கிண்ண தொடர் ஒக்டோபர் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளுடன் எஞ்சிய ஐ.பி.எல் போட்டிகளையும் நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Exclusive Clips