டோக்கியோ ஒலிம்பிக்கை மீண்டும் ஒத்திவைக்கக் கோரி கையெழுத்து வேட்டை!

Friday, 07 May 2021 - 12:19

%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B+%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%21
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை மீள ஒத்திவைக்குமாறு கோரி இணையவழி மனுவொன்றில் இதுவரை 187, 000 பேர் கையெழுத்திட்டுள்ளதாக, குறித்த கையெழுத்து இயக்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல்  உலகளாவிய ரீதியில் அதிகரித்துள்ளதன் காரணமாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பகும் விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள், தன்னார்வ ஊழியர்கள் மற்றும் ஜப்பானிய பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மிகவும் கடினமானது என அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் தற்போதும் கூட ஒரு வருடம் பிற்போடப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் ஜுலை 23 ஆம்திகதி மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் தற்போது 4ஆவது கொரோனா அலைக்கு முகங்கொடுத்துவரும் நிலையில், ஒலிம்பிக் போட்டியை நடத்துவதால் மேலும் உயிரச்சுறுத்தல் ஏற்படும் என்று, ஒலிம்பிக் போட்டிகளுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறெனினும், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.







Exclusive Clips