இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி திகதிகள் அறிவிப்பு!

Friday, 11 June 2021 - 9:40

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+-+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய குழாம் நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டிகள் எதிர்வரும் ஜுலை 13 ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

இரு அணிகளுக்கும் இடையில் மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 3 இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

ஜுலை 13, 16  மற்றும் 18 ஆகிய திகதிகளில் ஒரு நாள் சர்வதேச போட்டிகளும், ஜுலை 21, 23, 25 ஆகிய திகதிகளில் இருபதுக்கு இருபது போட்டிகளும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தொடரில் பங்குபற்றும் இந்திய அணிக்கு ஷிக்கர் தவான் தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.

அணியின் துணை தலைவராக புவனேஸ்வர் குமார், பெயரிடப்பட்டுள்ளதோடு சில புதுமுக வீரர்களும் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியின் தலைவர் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரின்போது அவர்களுக்கு ஓய்வளிக்கப்படுகிறது.


இலங்கைக்கு எதிரான தொடரில் பங்குபற்றும் ஏனைய வீரர்கள் விபரம்

ப்ரித்வி ஷா

தேவ்தத் படிக்கல்

ருத்ராஜ் கெய்க்வாட்

சூர்யகுமார் யாதவ்

மனிஷ் பாண்டே

ஹர்டிக் பாண்ட்யா

நித்திஸ் ராணா

இஷான் கிஷன் (விக்கெட் காப்பாளர்)

சஞ்சு செம்ஸன் 

யுஸ்வெந்தர் சஹல்

ராஹுல் செஹர்

கே. கௌதம்

க்ருணல் பாண்ட்யா

குல்தீப் யாதவ்

வருண் சக்ரவர்த்தி

தீபக் செஹர்

நவ்தீவ் சைனி

சேதன் சகாரியா

Exclusive Clips