பாகிஸ்தான் அணி 7 ஓட்டங்களால் வெற்றி!

Sunday, 01 August 2021 - 8:44

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+7+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%21
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. 

போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 8 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

இந்தநிலையில், 158 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது. 

போட்டியின் ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணியின் மொஹமட் ஹாபிஸ் தெரிவானார்.





Exclusive Clips