2021 லங்கா ப்ரீமியர் லீக் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது

Wednesday, 13 October 2021 - 17:41

2021+%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+++

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால் இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள லங்கா ப்ரீமியர் லீக் 2021 தொடர் எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அன்றைய தினம் மாலை 3 மணிக்கு போட்டி அங்குரார்ப்பண வைபவம் இடம்பெறும் அதேவேளை, மாலை 7.30க்கு இடம்பெறவுள்ள முதலாவது போட்டியில் காலி க்ளேடியேட்டர் மற்றும் ஜஃப்னா கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன.

கடந்த வருடம் நடைபெற்ற அனைத்து போட்டிகளும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இடம்பெற்றிருந்தன.

எனினும், 2 ஆவது பருவத்தில் நடைபெறவுள்ள 20 லீக் போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.

லீக் போட்டிகளின் பின்னர் டிசம்பர் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதிப்போட்டிக்காக தகுதிபெறும், தகுதிகாண் சுற்றின் 2 போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி என்பன ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளன.

இம்முறை டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி இறுதிப்போட்டி நடைபெறவுள்ளதுடன், 24ஆம் திகதி இறுதிப்போட்டிக்கான மேலதிக நாளாக ஒதுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No description available.Exclusive Clips