பங்களாதேஷ் அணியுடனான கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

Thursday, 14 October 2021 - 19:03

%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+++
19 வயதிற்கு உட்பட்ட பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணிக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்வாளர் குழுவினால் இந்தக் குழாம் தெரிவுசெய்யப்பட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இதற்கமைய, துனித் வெல்லலகே தலைமையில் 20 பேர் கொண்ட அணிக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

19 வயதிற்கு உட்பட்ட இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடர் நாளைய தினம் தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

19 வயதிற்கு உட்பட்ட இலங்கை அணிக்குழாம்....

துனித் வெல்லலகே (தலைவர்) - புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு 10

ஷெவோன் டேனியல் - புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு 10

பவன் பத்திராஜ - திரித்துவக் கல்லூரி, கண்டி

சதிஷா ராஜபக்ஷ - ரோயல் கல்லூரி, கொழும்பு

ரயான் பெர்னாண்டோ - புனித தோமையார் கல்லூரி, கல்கிசை

ஹரிந்து ஜயசேகர - புனித தோமையார் கல்லூரி, மாத்தறை

சதீஷ் ஜெயவர்த்தன - புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு 10

லஹிரு தாவதகே - புனித பீட்டர்ஸ் கல்லூரி, கொழும்பு

வனூஜ சஹான் குமார - புனித பீட்டர்ஸ் கல்லூரி, கொழும்பு

ரவீன் டி சில்வா (உப தலைவர்) - நாலந்தா கல்லூரி, கொழும்பு

மல்ஷ தருபதி - மாதம்ப மத்திய மஹா வித்தியாலயம், அம்பலங்கொடை

ஜீவக ஷஷீன் ரஷ்மிதா - தேவபதிராஜ கல்லூரி, ரத்கம

டிராவீன் மெத்யூ - புனித அந்தோனியார் கல்லூரி, கட்டுகஸ்தோட்டை

சசங்க நிர்மல் - தேவபதிராஜ கல்லூரி, ரத்கம

தனல் ஹேமானந்தா - புனித பீட்டர்ஸ் கல்லூரி, கொழும்பு

யசிரு ரொட்ரிகோ – புனித தோமையார் கல்லூரி, கல்கிசை

மாதீஷ பத்திரண - திரித்துவக் கல்லூரி, கண்டி

சமிது விக்கிரமசிங்க - புனித அந்தோனியார் கல்லூரி, கட்டுகஸ்தோட்டை

லஹிரு அபேசிங்க - புனித அந்தோனியார் கல்லூரி, கட்டுகஸ்தோட்டை

வினுஜ ரன்புல் - நாலந்தா கல்லூரி, கொழும்பு


Exclusive Clips