பங்களாதேஷ் அணி 'சுப்பர் 12' சுற்றுக்குள் நுழைந்தது

Thursday, 21 October 2021 - 19:24

+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%27%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+12%27+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81
உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரின் முதல் சுற்றுக்கான 9ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணி 84 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டிகளில் வெற்றிபெற்றதையடுத்து, பங்களாதேஷ் அணி, குழு B யிலிருந்து முதலாவது அணியாக சுப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்துள்ளது. 

பப்புவா நியுகினி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில், அதிகபடியாக மஹ்மதுல்லா 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் பப்புவா நியுகினி அணியின் கபுவா மோரியா 26 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்தநிலையில், 182 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய பப்புவா நியுகினி அணி 19.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 97 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

அணிசார்பில், அதிகபடியாக கிப்ளின் டோரிகா 46 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணியின் ஷகிப் அல் ஹசன் 09 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக ஷகிப் அல் ஹசன் தெரிவானார்.







Exclusive Clips