மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை முன்னிலையில்

Wednesday, 24 November 2021 - 19:20

%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று (24) இடம்பெற்றது.

போட்டியில் 348 என்ற வெற்றியிலக்கை நோக்கி தமது இரண்டாம் இனிங்ஸ்க்காக துடுப்பாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி இன்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 52 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

முன்னதாக தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியிருந்தது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் திமுத் கருணாரட்ன 83 ஓட்டங்களையும், எஞ்சலோ மெத்யூஸ் 69 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 386 ஓட்டங்களை பெற்றதுடன், மேற்கிந்திய தீவுகள் அணி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 230 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது


Exclusive Clips