குஜராத் டைட்டன்ஸ் 37 ஓட்டங்களால் வெற்றி

Friday, 15 April 2022 - 10:19

%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+37+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
இந்தியன் ப்ரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 37 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பாக அதன் தலைவர் ஆட்டமிழக்காது 87 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

தொடர்ந்து 193 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பாக ஜோஸ் பட்லர் 54 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.Exclusive Clips