மழைக்காரணமாக இறுதிப் போட்டி தாமதம்: அகமதாபாத்தை ஆக்கிரமித்த மஞ்சள் படை!

Sunday, 28 May 2023 - 19:33

%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%3A+%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%21
16ஆவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்தப் போட்டி இன்றிரவு 7.30 மணியளவில் ஆரம்பமாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.

எனினும், அகமதாபாத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக போட்டியை ஆரம்பிப்பதில் தாமதமாகும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் அணிகள் மோதவுள்ள இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, இன்றைய இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் வருகைத் தந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் வருவதனை காணமுடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியை பார்க்க வந்த ரசிகர்களில் அதிகமானோர் தோனியின் முகம் பதிக்கப்பட்ட மஞ்சள் நிற ஆடையுடன் வருகை தருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.







Exclusive Clips