இன்றும் மழை குறுக்கிடுமா?

Monday, 29 May 2023 - 17:56

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F
16ஆவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்றிரவு இடம்பெறவுள்ளது.

இந்தப் போட்டி நேற்றிரவு 7.30 மணியளவில் ஆரம்பமாக திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், அகமதாபாத்தில் தொடர்ந்தும் பெய்து வந்த கடும் மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

நேற்று போட்டியை நடாத்த முடியாத நிலை ஏற்பட்டதால் இன்றிரவு போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டது.

எனினும், இன்று பிற்பகல் வேளையிலும் அகமதாபாத்தில் மழை பெய்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதுமட்டுமன்றி, இன்றிரவும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்நாட்டு தனியார் வளிமண்டலவியல் திணைக்களம் ஒன்று தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையில், இன்றும் மழை பெய்தால் ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்டு போட்டி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இல்லையேல், சுப்பர் ஓவர் முறைமையில் சரி போட்டி நடாத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

மழை இடைவிடாது பெய்து போட்டியை நடாத்த முடியாமல் போனால், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் அணிக்கு வெற்றிக் கிண்ணம் வழங்ககப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.







Exclusive Clips