Video of the Day
Latest TV News Bulletin
Most Top News

சபரகமுவ, மத்திய மாகாணங்கள் மற்றும் பதுளையில் கனமழை பெய்யக்கூடும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

General 17 October 2026
சபரகமுவ, மத்திய மாகாணங்கள் மற்றும் பதுளையில் கனமழை பெய்யக்கூடும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

ICONIC AWARDS 2026 விருது வழங்கும் விழாவில் 'ஹிரு' பல விருதுகளை தன்வசப்படுத்தியது.

General 17 October 2026
ICONIC AWARDS 2026 விருது வழங்கும் விழாவில் 'ஹிரு' பல விருதுகளை தன்வசப்படுத்தியது.

முழுமையாக சீரமைக்கப்பட்டது மின்சார விநியோகக் கட்டமைப்பு: தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் நிறுவனம் அறிவிப்பு!

General 17 October 2026
முழுமையாக சீரமைக்கப்பட்டது மின்சார விநியோகக் கட்டமைப்பு: தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் நிறுவனம் அறிவிப்பு!

காவன்திஸ்ஸ யானையின் மரணம்: விசாரணைகளை முன்னெடுக்க கல்கமுவ நீதிமன்றம் உத்தரவு!

General 17 October 2026
காவன்திஸ்ஸ யானையின் மரணம்: விசாரணைகளை முன்னெடுக்க கல்கமுவ நீதிமன்றம்  உத்தரவு!

மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நீர் விநியோகம் மீண்டும் ஆரம்பம்!

General 17 October 2026
மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து  நீர் விநியோகம் மீண்டும் ஆரம்பம்!

மின்சார விநியோகம் 50 சதவீதத்திற்கும் மேலாக மீளமைக்கப்பட்டுள்ளது!

General 17 October 2026
மின்சார விநியோகம் 50 சதவீதத்திற்கும் மேலாக மீளமைக்கப்பட்டுள்ளது!
International News

வெற்றிகரமாக முடிந்த நுரையீரல் அறுவை சிகிச்சை: பாப்பரசரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தகவல்!

International 17 October 2026
வெற்றிகரமாக முடிந்த நுரையீரல் அறுவை சிகிச்சை: பாப்பரசரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தகவல்!

விபத்தில் தனது அலகுகளை இழந்த பறவைக்கு 3D-பிரிண்டிங் மூலம் புதிய அலகுகள்!

International 17 October 2026
விபத்தில் தனது அலகுகளை இழந்த பறவைக்கு 3D-பிரிண்டிங் மூலம் புதிய அலகுகள்!

அரசு மரியாதையுடன் இசையமைப்பாளர் தேவாவின் இறுதிக்கிரியைகள் நாளை நடைபெறும் : தமிழக அரசு அறிவிப்பு!

International 17 October 2026
அரசு மரியாதையுடன் இசையமைப்பாளர் தேவாவின் இறுதிக்கிரியைகள் நாளை நடைபெறும் : தமிழக அரசு அறிவிப்பு!

தேவா அருமையான சொக்கத் தங்கம்: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!

International 17 October 2026
தேவா அருமையான சொக்கத் தங்கம்: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!

தேவாவின் பூதவுடலுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி

International 17 October 2026
தேவாவின் பூதவுடலுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி

தேவாவின் இசைப் பங்களிப்புக்கு கௌரவம் – இறுதிச் சடங்கில் அரச மரியாதை!

International 17 October 2026
தேவாவின் இசைப் பங்களிப்புக்கு கௌரவம் – இறுதிச் சடங்கில் அரச மரியாதை!

காசாவில் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்த பிறகு இஸ்ரேலிய தாக்குதல்களால் 340க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழப்பு

International 17 October 2026
காசாவில் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்த பிறகு இஸ்ரேலிய தாக்குதல்களால் 340க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழப்பு

அமெரிக்காவின் புதிய தடைகளிலிருந்து ரஷ்யாவுக்கு விலக்கு - ட்ரம்ப் எடுத்த திடீர் முடிவு!

International 17 October 2026
அமெரிக்காவின் புதிய தடைகளிலிருந்து ரஷ்யாவுக்கு விலக்கு - ட்ரம்ப் எடுத்த திடீர் முடிவு!

முதல் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சர்ச்சை - 5 நாட்களில் பதவி விலகும் வெள்ளை மாளிகை ஊடகப் பேச்சாளர்!

International 17 October 2026
முதல் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சர்ச்சை - 5 நாட்களில் பதவி விலகும் வெள்ளை மாளிகை ஊடகப் பேச்சாளர்!

செங்கடல் பகுதியில் தொடரும் பதற்றம்: யேமன் மற்றும் சவூதி அரேபியாவில் அதிர்ச்சித் தாக்குதல்கள்!

International 17 October 2026
செங்கடல் பகுதியில் தொடரும் பதற்றம்: யேமன் மற்றும் சவூதி அரேபியாவில் அதிர்ச்சித் தாக்குதல்கள்!

போரினால் வெடித்த பொருளாதார நெருக்கடி: 110 டொலர்களைத் தாண்டிய உலகளாவிய மசகு எண்ணெய் விலை!

International 17 October 2026
போரினால் வெடித்த பொருளாதார நெருக்கடி: 110 டொலர்களைத் தாண்டிய உலகளாவிய மசகு எண்ணெய் விலை!

பிறந்தநாள் பரிசாகக் கிடைத்த குதிரை... இன்று உலக சாதனையைத் தட்டித் தூக்கியுள்ளது!

International 17 October 2026
பிறந்தநாள் பரிசாகக் கிடைத்த குதிரை... இன்று உலக சாதனையைத் தட்டித் தூக்கியுள்ளது!

தாயின் சிகிச்சைக்காக கோவை வந்த சிறுவன்! விஜய்யை சந்திக்க முடியாமல் ஏமாற்றம்

International 16 October 2026
தாயின் சிகிச்சைக்காக கோவை வந்த சிறுவன்! விஜய்யை சந்திக்க முடியாமல் ஏமாற்றம்

10 வருட போராட்டம்- புகழின் உச்சியில் மனைவிக்கு வந்த சோதனை- நெகிழ வைக்கும் காதலின் பின்னணி

International 16 October 2026
10 வருட போராட்டம்- புகழின் உச்சியில் மனைவிக்கு வந்த சோதனை- நெகிழ வைக்கும் காதலின் பின்னணி

கொட்டும் மழையிலும் முதலமைச்சர் விஜய்யை காண காத்திருக்கும் பொதுமக்கள்

International 16 October 2026
கொட்டும் மழையிலும் முதலமைச்சர் விஜய்யை காண காத்திருக்கும் பொதுமக்கள்
More News
General17 October 2026

திடீர் மின்வெட்டு: நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை

மின்வெட்டு காரணமாக நீர் விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடும் என்பதால், நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் திடீரேன ஏற்பட்டுள்ள மின்சாரத் தடையை தொடர்ந்து இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.

விபரங்களுக்கு
திடீர் மின்வெட்டு: நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை
General17 October 2026

எரிவாயு விநியோகத் தடைகள் விரைவில் தீர்க்கப்படும் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு விநியோகத் தடைகள் விரைவில் தீர்க்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, அன்றாடத் தேவையைவிட அதிகளவிலான சமையல் எரிவாயு கொள்கலன்களைச் சந்தைக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.அதன்படி, எதிர்வரும் நாட்களில் நாளொன்றுக்கு 80,000 முதல் 100,000 வரையான சமையல் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகத் தடைகள் விரைவில் சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விபரங்களுக்கு
எரிவாயு விநியோகத் தடைகள் விரைவில் தீர்க்கப்படும் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
General17 October 2026

திடீர் மின்வெட்டு: அம்பதலை மற்றும் பியகம நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்

அம்பதலை மற்றும் பியகம நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் மின் விநியோகம் தடைப்பட்டதைத் தொடர்ந்து செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

விபரங்களுக்கு
திடீர் மின்வெட்டு: அம்பதலை மற்றும் பியகம நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்
General17 October 2026

வீட்டுச் சூரிய மின்கலங்களை உடனடியாக நிறுத்தி வைக்குமாறு பயனாளர்களிடம் கோரிக்கை!

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடையைத் தொடர்ந்து, வீடுகளின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கலக் கட்டமைப்புகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு பயனாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய மின்சாரக் கட்டமைப்பின் சார்பில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடைகளை விரைவாகச் சீரமைத்து, மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்சாரத்துறை பிரதி அமைச்சர் அர்காம் இலியாஸ் தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
வீட்டுச் சூரிய மின்கலங்களை உடனடியாக நிறுத்தி வைக்குமாறு பயனாளர்களிடம்  கோரிக்கை!
General17 October 2026

மேல் கொத்மலை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பிரச்சினை திடீர் மின்வெட்டுக்கு காரணமா?

மேல் கொத்மலை (Upper Kotmale) மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பிரச்சினையே திடீர் மின்வெட்டுக்கு காரணமாக இருக்கலாம் என மின்சக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
மேல் கொத்மலை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பிரச்சினை திடீர் மின்வெட்டுக்கு காரணமா?
International News

வெற்றிகரமாக முடிந்த நுரையீரல் அறுவை சிகிச்சை: பாப்பரசரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தகவல்!

International 17 October 2026
வெற்றிகரமாக முடிந்த நுரையீரல் அறுவை சிகிச்சை: பாப்பரசரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தகவல்!

விபத்தில் தனது அலகுகளை இழந்த பறவைக்கு 3D-பிரிண்டிங் மூலம் புதிய அலகுகள்!

International 17 October 2026
விபத்தில் தனது அலகுகளை இழந்த பறவைக்கு 3D-பிரிண்டிங் மூலம் புதிய அலகுகள்!

அரசு மரியாதையுடன் இசையமைப்பாளர் தேவாவின் இறுதிக்கிரியைகள் நாளை நடைபெறும் : தமிழக அரசு அறிவிப்பு!

International 17 October 2026
அரசு மரியாதையுடன் இசையமைப்பாளர் தேவாவின் இறுதிக்கிரியைகள் நாளை நடைபெறும் : தமிழக அரசு அறிவிப்பு!

தேவா அருமையான சொக்கத் தங்கம்: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!

International 17 October 2026
தேவா அருமையான சொக்கத் தங்கம்: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!

தேவாவின் பூதவுடலுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி

International 17 October 2026
தேவாவின் பூதவுடலுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி

தேவாவின் இசைப் பங்களிப்புக்கு கௌரவம் – இறுதிச் சடங்கில் அரச மரியாதை!

International 17 October 2026
தேவாவின் இசைப் பங்களிப்புக்கு கௌரவம் – இறுதிச் சடங்கில் அரச மரியாதை!

காசாவில் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்த பிறகு இஸ்ரேலிய தாக்குதல்களால் 340க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழப்பு

International 17 October 2026
காசாவில் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்த பிறகு இஸ்ரேலிய தாக்குதல்களால் 340க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழப்பு

அமெரிக்காவின் புதிய தடைகளிலிருந்து ரஷ்யாவுக்கு விலக்கு - ட்ரம்ப் எடுத்த திடீர் முடிவு!

International 17 October 2026
அமெரிக்காவின் புதிய தடைகளிலிருந்து ரஷ்யாவுக்கு விலக்கு - ட்ரம்ப் எடுத்த திடீர் முடிவு!

முதல் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சர்ச்சை - 5 நாட்களில் பதவி விலகும் வெள்ளை மாளிகை ஊடகப் பேச்சாளர்!

International 17 October 2026
முதல் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சர்ச்சை - 5 நாட்களில் பதவி விலகும் வெள்ளை மாளிகை ஊடகப் பேச்சாளர்!

செங்கடல் பகுதியில் தொடரும் பதற்றம்: யேமன் மற்றும் சவூதி அரேபியாவில் அதிர்ச்சித் தாக்குதல்கள்!

International 17 October 2026
செங்கடல் பகுதியில் தொடரும் பதற்றம்: யேமன் மற்றும் சவூதி அரேபியாவில் அதிர்ச்சித் தாக்குதல்கள்!

போரினால் வெடித்த பொருளாதார நெருக்கடி: 110 டொலர்களைத் தாண்டிய உலகளாவிய மசகு எண்ணெய் விலை!

International 17 October 2026
போரினால் வெடித்த பொருளாதார நெருக்கடி: 110 டொலர்களைத் தாண்டிய உலகளாவிய மசகு எண்ணெய் விலை!

பிறந்தநாள் பரிசாகக் கிடைத்த குதிரை... இன்று உலக சாதனையைத் தட்டித் தூக்கியுள்ளது!

International 17 October 2026
பிறந்தநாள் பரிசாகக் கிடைத்த குதிரை... இன்று உலக சாதனையைத் தட்டித் தூக்கியுள்ளது!

தாயின் சிகிச்சைக்காக கோவை வந்த சிறுவன்! விஜய்யை சந்திக்க முடியாமல் ஏமாற்றம்

International 16 October 2026
தாயின் சிகிச்சைக்காக கோவை வந்த சிறுவன்! விஜய்யை சந்திக்க முடியாமல் ஏமாற்றம்

10 வருட போராட்டம்- புகழின் உச்சியில் மனைவிக்கு வந்த சோதனை- நெகிழ வைக்கும் காதலின் பின்னணி

International 16 October 2026
10 வருட போராட்டம்- புகழின் உச்சியில் மனைவிக்கு வந்த சோதனை- நெகிழ வைக்கும் காதலின் பின்னணி

கொட்டும் மழையிலும் முதலமைச்சர் விஜய்யை காண காத்திருக்கும் பொதுமக்கள்

International 16 October 2026
கொட்டும் மழையிலும் முதலமைச்சர் விஜய்யை காண காத்திருக்கும் பொதுமக்கள்
Sports Stories
Explore More
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து மஹேல ஜயவர்தன விலகல்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து மஹேல ஜயவர்தன விலகல்!

ஐபிஎல் தொடரின் முன்னணி அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஐபிஎல் தொடர்களைக் கருத்திற்கொண்டு, அணிக்குப் புதிய மாற்றங்களையும் அணுகுமுறைகளையும் அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அணியின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் புதிய மூலோபாய அணுகுமுறைகள் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட பரஸ்பர உடன்பாட்டின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.மும்பை இந்தியன்ஸ் அணிக்குப் பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுக்கப் பங்களித்த மஹேல ஜயவர்தனவின் பதவி விலகல், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபரங்களுக்கு
வெற்றி யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் மாபெரும் இறுதிப்போட்டியில் களமிறங்கும் இரு அணிகள்!

வெற்றி யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் மாபெரும் இறுதிப்போட்டியில் களமிறங்கும் இரு அணிகள்!

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில், இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுத் தொடரை 2-2 என்ற கணக்கில் சமநிலையில் வைத்துள்ளன. இதனால், இன்றைய போட்டி தொடர் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது. இரு அணிகளுமே வெற்றியை கைப்பற்றும் நோக்கில் தீவிரமாக மோதவுள்ளதால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி இளம்படை வீரர்கள் மற்றும் அதிரடி ஆட்டக்காரர்களின் பங்களிப்புடன் கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது. மறுபுறம், மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவை வீழ்த்தி வெற்றியைக் கைப்பற்றக் கடுமையாகப் போராடும். இன்றைய போட்டியில் வெற்றி பெற்று டி20 தொடரைக் கைப்பற்றப் போவது எந்த அணி என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே உச்சத்தை எட்டியுள்ளது.

விபரங்களுக்கு
ஸிம்பாப்வே அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி!

ஸிம்பாப்வே அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி!

இந்தியா மற்றும் ஸிம்பாப்வே மகளிர் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதன் முதலாவது போட்டி ராய்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஸிம்பாப்வே அணி, தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், ஆரம்ப வீராங்கனை கெலிஸ் 42 பந்துகளில் 42 ஓட்டங்களும், ஷேர்ன் மார்ஸ் 33 பந்துகளில் 43 ஓட்டங்களும் சேர்த்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஸிம்பாப்வே மகளிர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 114 ஓட்டங்களை பெற்றது. இந்திய அணி தரப்பில் நந்தனி ஷர்மா 2 விக்கெட்டுகளையும், கிரான்டி கௌத், அருந்ததி ரெட்டி மற்றும் ஸ்ரீ சராணி தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 115 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை நோக்கித் துரத்திய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் முன்னணி வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா (9 ஓட்டங்கள்), ஷஃபாளி வெர்மா (4 ஓட்டங்கள்), அனுஷ்கா சர்மா (4 ஓட்டங்கள்) மற்றும் ஹர்மன்பிரீத் கௌர் (1 ஓட்டம்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். ஆனாலும், அணியை மீட்டெடுக்கப் போராடிய நிகி பிரசாத் மற்றும் தீப்தி சர்மா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் தீப்தி சர்மா சிறப்பாக விளையாடி 37 பந்துகளில் 49 ஓட்டங்களைக் குவித்தார். இறுதியில் இந்திய அணி 15.4 ஓவர்களிலேயே 6 விக்கெட் இழப்புக்கு 116 ஓட்டங்களை எட்டியது. இதன் மூலம் ஸிம்பாப்வே அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தன் வெற்றியை பதிவு செய்துள்ளது.

விபரங்களுக்கு
ஃபுல் டாஸ் பந்துகளை வீசிவிட்டு ஆடுகளத்தைக் குறை கூறாதீர்கள்! – சுனில் கவாஸ்கர் கடும் விமர்சனம்

ஃபுல் டாஸ் பந்துகளை வீசிவிட்டு ஆடுகளத்தைக் குறை கூறாதீர்கள்! – சுனில் கவாஸ்கர் கடும் விமர்சனம்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான நான்காவது T20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஆடுகளத்தைக் குறை கூறுவதற்குப் பதிலாகப் பந்துவீச்சாளர்களின் தவறுகளை ஆராய வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 247 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19.3 ஓவர்களில் 223 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததால், 24 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இந்தத் தோல்விக்குப் பின்னர் ஆடுகளத்தின் தன்மை குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்திய அணியின் பந்துவீச்சில் காணப்பட்ட குறைபாடுகளே தோல்விக்கு முக்கியக் காரணம் எனக் கவாஸ்கர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜியோஹாட்ஸ்டாரில் போட்டி குறித்து கருத்துத் தெரிவித்த அவர், திலக் வர்மா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் இணைந்து ஓட்டங்களைக் குவித்துக் கொண்டிருந்தபோது, மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சாளர்களும் பல முழுநீளக் குறைபாடுகளுடன் கூடிய பந்துகளை (Full Toss) வீசியதாகக் குறிப்பிட்டார். பந்துவீச்சாளர்கள் சரியான திசையிலும், சரியான நீளத்திலும் பந்துகளை வீசத் தவறிவிட்டு ஆடுகளத்தைக் குறை கூறுவது பொருத்தமற்றது என்பதே அவரது கருத்தாகும். பின்னர் மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சாளர்கள் சரியான நீளத்தில் பந்துகளை வீசியதுடன், யோர்க்கர் பந்துகளையும் துல்லியமாகப் பயன்படுத்தியபோது விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். எனவே, ஆடுகளத்தின் தன்மையை மட்டும் குறை கூறாமல், பந்துவீச்சாளர்கள் தங்களது பந்துவீச்சுத் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்துவதிலும், பந்துகளின் திசை மற்றும் நீளத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும் எனக் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரில், இந்தத் தோல்வியுடன் தொடர் 2–2 எனச் சமநிலையை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
இந்திய அணிக்கான எனது பயணம் நிறைவு பெற்றது : திடீரென ஓய்வை அறிவித்த பூனம் ரவுட்!

இந்திய அணிக்கான எனது பயணம் நிறைவு பெற்றது : திடீரென ஓய்வை அறிவித்த பூனம் ரவுட்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீராங்கனை பூனம் ரவுட், சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த ஓய்வு உடனடியாக அமுலுக்கு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 37 வயதான இவர், 2009 முதல் 2021 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகள், 73 ஒருநாள் போட்டிகள் (ODI) மற்றும் 35 டி20 போட்டிகளில் விளையாடி குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமது ஓய்வு முடிவு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவுக்காக விளையாடியது தமது வாழ்நாளின் மிகப்பெரிய கௌரவம் என்றும், கிரிக்கெட் வெறும் விளையாட்டு மட்டுமல்லாது தனது ஆளுமையை வடிவமைத்து மன உறுதியைக் கற்றுக் கொடுத்தது என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்திய அணியின் சீருடையை அணிந்த ஒவ்வொரு கணமும் தனது நனவான கனவு எனவும், தனக்கு ஆரம்பக் கட்டத்தில் உறுதுணையாக இருந்த மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கும் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
2027ஆம் ஆண்டு Formula 3 போட்டி : இலங்கையிலிருந்து பங்கேற்கும் வீரர்!

2027ஆம் ஆண்டு Formula 3 போட்டி : இலங்கையிலிருந்து பங்கேற்கும் வீரர்!

இலங்கை பந்தய வீரரான யெவன் டேவிட், 2027ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஃபோர்முலா 3 (FIA Formula 3) செம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக நெதர்லாந்தின் வான் அமர்ஸ்ஃபோர்ட் ரேசிங் (Van Amersfoort Racing) அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். 19 வயதான யெவன் டேவிட், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஃபோர்முலா 3 போட்டியில் பங்கேற்கவுள்ளார். 2026ஆம் ஆண்டில் தனது அறிமுகப் பருவத்தில் போட்டியிட்ட அவர், 35 புள்ளிகளுடன் ஓட்டுநர்களுக்கான தரவரிசையில் 18ஆவது இடத்தைப் பெற்றார். அத்துடன், சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற ஸ்பிரிண்ட் பந்தயத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்தமை அவரது சிறப்பான ஆட்டமாக அமைந்தது. இதற்கு முன்னர், 2025ஆம் ஆண்டு யூரோஃபார்முலா ஓபன் செம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற யெவன் டேவிட், ஆறு வெற்றிகள் மற்றும் 14 முறை வெற்றிப் பீடமேறி, ஒட்டுமொத்த தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பெற்றிருந்தார். வான் அமர்ஸ்ஃபோர்ட் ரேசிங் அணியுடனான ஒப்பந்தம் தனது பந்தய வாழ்க்கையில் சரியான முன்னேற்றமாக அமையும் என யெவன் டேவிட் தெரிவித்துள்ளார். அணியின் தலைமைத்துவம், அனுபவம் மற்றும் போட்டித்தன்மை மிக்க அணுகுமுறை குறித்தும் அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். அதேவேளை, அணியின் தலைவர் பிராட் ஜோய்ஸ், யெவன் டேவிட்டின் திறமையையும் சில்வர்ஸ்டோன் போட்டியில் அவர் வெளிப்படுத்திய ஆற்றலையும் பாராட்டியுள்ளார். 2027ஆம் ஆண்டில் அவரது அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு மேலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் சர்வதேச மோட்டார் பந்தயத் துறையில் தனது திறமையை மேலும் வளர்த்துக்கொண்டு, ஃபோர்முலா பந்தயப் பிரிவுகளில் முன்னேறுவதற்கான மற்றுமொரு வாய்ப்பு யெவன் டேவிட்டுக்குக் கிடைத்துள்ளது.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
Lesi Pay ஊடாக ஸ்மார்ட் சாதனங்களை எளிதாகப் பெற்றுக்கொள்ள Dialog Finance – Softlogic Retail கூட்டாண்மை

Lesi Pay ஊடாக ஸ்மார்ட் சாதனங்களை எளிதாகப் பெற்றுக்கொள்ள Dialog Finance – Softlogic Retail கூட்டாண்மை

Dialog Finance பிஎல்சி மற்றும் Softlogic Retail ஆகிய நிறுவனங்கள் மூலோபாயக் கூட்டாண்மையில் இணைந்துள்ளன. இதன் மூலம், Lesi Pay சேவையூடாக ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட ஸ்மார்ட் சாதனங்களை இலகுவான நிதித் திட்டங்களின் கீழ் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்தக் கூட்டாண்மையின் கீழ், வாடிக்கையாளர்கள் Lesi Pay சேவையின் டிஜிட்டல் நிதியுதவி வசதியைப் பயன்படுத்தி, Softlogic நிறுவனத்தின் பங்கேற்கும் விற்பனை நிலையங்கள் மற்றும் காட்சிக்கூடங்களிலிருந்து ஸ்மார்ட் சாதனங்களைக் கொள்வனவு செய்ய முடியும்.இதன் மூலம், இலங்கையர்கள் அத்தியாவசியமான டிஜிட்டல் சாதனங்களை எளிதில் பெற்றுக்கொள்வதுடன், அவற்றைக் கொள்வனவு செய்வதற்கான செலவுகளைத் தமது வசதிக்கேற்ப நிர்வகிக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.வாடிக்கையாளர்கள் Dialog Pay செயலி மூலம் விண்ணப்பச் செயல்முறையை ஆரம்பித்து, தமது தகுதியை மின்னணு முறையில் சரிபார்த்த பின்னர், Softlogic நிறுவனத்தின் பங்கேற்கும் விற்பனை நிலையங்களில் கொள்வனவுகளை நிறைவு செய்யலாம்.Lesi Pay திட்டத்தின் கீழ், தகுதியுடைய வாடிக்கையாளர்கள் கடன் அட்டை அல்லது பொறுப்பாளி இன்றி, குறைந்தபட்ச முற்பணத்துடன் 18 மாதங்கள் வரையிலான தவணை முறையில் ஸ்மார்ட் சாதனங்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதியுதவியைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன், காகிதமற்ற விண்ணப்பச் செயல்முறையின் மூலம் குறைந்தளவிலான ஆவணங்களுடன் நிதியுதவிக்கு விண்ணப்பிக்கவும் முடியும்.இந்தக் கூட்டாண்மை தொடர்பில் கருத்துத் தெரிவித்த டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழுமத் தலைமை டிஜிட்டல் சேவைகள் அதிகாரி ரேணுகா பெர்னாண்டோ, கல்வி, வேலைவாய்ப்பு, நிதி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காகவும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் பங்கேற்பதற்காகவும் ஸ்மார்ட்போன் அணுகல் அத்தியாவசியமானதாக மாறிவருவதாகக் குறிப்பிட்டார்.Softlogic Retail நிறுவனத்துடனான இந்தக் கூட்டாண்மை, ஸ்மார்ட் சாதனங்களை எளிதாகவும் மலிவாகவும் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை விரிவுபடுத்துவதில் முக்கியமான படியாகும் என்றும், டிஜிட்டல் புத்தாக்கத்தையும் நம்பகமான சில்லறை விற்பனை அனுபவத்தையும் ஒன்றிணைப்பதன் மூலம் அதிகளவிலான இலங்கையர்கள் ஸ்மார்ட் சாதனங்களைச் சொந்தமாக்கிக்கொள்ள உதவ முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.இதேவேளை, Softlogic Holdings PLCயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சன் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை நுகர்வோருக்கு முன்னணி தொழில்நுட்பத் தயாரிப்புகளையும் தரமான சில்லறை விற்பனை அனுபவங்களையும் நெருக்கமாகக் கொண்டுசெல்வதில் தமது நிறுவனம் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். Dialog Finance நிறுவனத்துடனான கூட்டாண்மையின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை நெகிழ்வான நிதித் திட்டங்களின் கீழ் எளிதாகக் கொள்வனவு செய்ய முடியும் என்றும், இது தமது சில்லறை விற்பனைச் சேவைகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.ஸ்மார்ட் கையடக்க த் தொலைபேசி பயன்பாடு கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு, நிதிச் சேவைகள் மற்றும் அரச, தனியார் டிஜிட்டல் தளங்களை அணுகுதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தநிலையில், சாதனங்களைக் கொள்வனவு செய்வதற்கான ஆரம்பக்கட்ட நிதிச் சுமையைக் குறைப்பதன் மூலம், இலங்கையின் வளர்ந்துவரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் அதிகளவிலான மக்கள் பங்கேற்பதை ஊக்குவிப்பதே இந்தக் கூட்டாண்மையின் நோக்கமாகும்.Lesi Pay சேவையானது, நாடளாவிய ரீதியில் Dialog Finance பிஎல்சியின் அங்கீகரிக்கப்பட்ட கூட்டாளர் வலையமைப்பு மற்றும் Softlogic Max உள்ளிட்ட Softlogic நிறுவனத்தின் பங்கேற்கும் விற்பனை நிலையங்கள், காட்சிக்கூடங்கள் ஊடாகக் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் Dialog Pay செயலியைப் பதிவிறக்கம் செய்து, டிஜிட்டல் தகுதிச் சரிபார்ப்பை நிறைவு செய்வதன் மூலம் விண்ணப்பச் செயல்முறையை ஆரம்பிக்கலாம்.Dialog Finance பிஎல்சி, இலங்கை நுகர்வோரின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த நிதித் தீர்வுகளை வழங்கி வருகிறது. Lesi Pay சேவையானது, காகிதமற்ற விண்ணப்பச் செயல்முறை, நெகிழ்வான மீள்செலுத்தல் தெரிவுகள் மற்றும் விரிவடைந்துவரும் சில்லறை விற்பனைக் கூட்டாளர் வலையமைப்பு ஆகியவற்றின் மூலம் தகுதியுடைய வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட் சாதனங்களை எளிதாகக் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.Softlogic Holdings PLC என்பது சில்லறை வர்த்தகம், தகவல் மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பம், சுகாதாரம், நிதிச் சேவைகள், வாகனங்கள், ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இயங்கும் இலங்கையின் முன்னணி பன்முக வணிகக் குழுமங்களில் ஒன்றாகும். தனது சில்லறை விற்பனை வலையமைப்பு மற்றும் சர்வதேச வர்த்தக நாமங்களின் ஊடாக, நாடு முழுவதும் உள்ள நுகர்வோருக்குப் பல்வேறு தொழில்நுட்பத் தயாரிப்புகளையும் சேவைகளையும் வழங்கி வருகிறது.Softlogic Holdings PLC என்பது சில்லறை வர்த்தகம், தகவல் மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பம், சுகாதாரம், நிதிச் சேவைகள், வாகனங்கள், ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இயங்கும் இலங்கையின் முன்னணி பன்முக வணிகக் குழுமங்களில் ஒன்றாகும். தனது சில்லறை விற்பனை வலையமைப்பு மற்றும் சர்வதேச வர்த்தக நாமங்களின் ஊடாக, நாடு முழுவதும் உள்ள நுகர்வோருக்குப் பல்வேறு தொழில்நுட்பத் தயாரிப்புகளையும் சேவைகளையும் வழங்கி வருகிறது.

விபரங்களுக்கு
டயலொக் மற்றும் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளை இணைந்து 'Yeheli.lk' ஊடாக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு

டயலொக் மற்றும் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளை இணைந்து 'Yeheli.lk' ஊடாக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு

இலங்கையின் முதன்மைத் தொடர்புச் சேவை வழங்கி இலங்கையின் முதன்மைத் தொடர்புச் சேவை வழங்கி நிறுவனமான Dialog Axiata PLC, மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையுடன் (Indira Cancer Trust) இணைந்து தனது தலைமையகப் பணியகத்தை இளஞ்சிவப்பு (Pink) வண்ண விளக்குகளால் ஒளிரச் செய்துள்ளது. மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் குடும்பங்களுக்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தவும், இது குறித்த விழிப்புணர்வு, வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆரம்பகட்டக் கண்டறிதலை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.டயலொக் நிறுவனத்தின் 'Yeheli.lk டிஜிட்டல் தளம் வழியாக இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் இத்தகைய விழிப்புணர்வுப் பிரசாரங்களின் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முழுவதும் ‘இதயத்திலிருந்து ஒரு உறுதிமொழி’ (A Pledge from the Heart) எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதன்கீழ், பொதுமக்கள் yeheli.lk தளத்திற்குச் சென்று, மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான இலவச மாதாந்திர எஸ்.எம்.எஸ் நினைவூட்டல்களைப் பெறப் பதிவுசெய்து, தங்களது உறுதிமொழியையும் எடுத்துக்கொள்ள முடியும். நம்பகமான மற்றும் மருத்துவ நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டத் தகவல்களைப் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்வதன் மூலம், மார்பக ஆரோக்கியம் குறித்த திறந்த உரையாடல்களை ஊக்குவிப்பதுடன், சுய மார்பகப் பரிசோதனைகள் மற்றும் ஆரம்பகட்டக் கண்டறிதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.இந்த நிகழ்வில் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் தலைவரும் அறங்காவலருமான மருத்துவர் லங்கா ஜயசூரிய திசாநாயக்க மற்றும் இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் கல்லூரியின் (SLCO) தலைவர் மருத்துவர் சஞ்சீவ குணசேகர ஆகியோருடன் Dialog Axiata PLC நிறுவனத்தின் சார்பில் பணிப்பாளர் / குழும முதன்மை நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க, குழும முதன்மை நிறுவன அதிகாரி அசங்க பிரியதர்ஷன, குழும முதன்மை மனிதவள அதிகாரி ரேகா வீரசூரிய மற்றும் குழும முதன்மை நிதி அதிகாரி சிம் சியூ ஷான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.இது குறித்து இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் தலைவரும் அறங்காவலருமான மருத்துவர் லங்கா ஜயசூரிய திசாநாயக்க தெரிவிக்கையில், “மார்பகப் புற்றுநோய் சிகிச்சையின் முடிவுகளை மேம்படுத்துவதில் ஆரம்பகட்டக் கண்டறிதல் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.எனவே தொடர்ச்சியான விழிப்புணர்வும், துல்லியமான தகவல்களைப் பெறுவதும் அவசியமாகிறது. டயலொக் நிறுவனத்துடனான எங்களது தொடர் பங்களிப்பானது, Yeheli.lk தளம் வழியாக அதிகமான மக்களைச் சென்றடையவும்; பெண்கள், அவர்தம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை மார்பக ஆரோக்கியம் குறித்துக் கவனத்துடன் செயல்படவும், வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டு தேவையான நேரத்தில் உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெறவும் ஊக்குவிக்கிறது எனக் குறிப்பிட்டார்.Dialog Axiata PLC நிறுவனத்தின் குழும முதன்மை நிறுவன அதிகாரி அசங்க பிரியதர்ஷன தெரிவிக்கையில்,இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையுடனான எங்களது கூட்டுப்பணி, தொழில்நுட்பம் மற்றும் நம்பகமான பங்களிப்புகள் மூலம் முக்கிய ஆரோக்கியத் தகவல்களை எளிதில் கிடைக்கச் செய்து சமூக நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான டயலொக்கின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. இந்த மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தில், Yeheli.lk தளம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமன்றி, நிபுணர்களால் சரிபார்க்கப்பட்ட தகவல்கள் மற்றும் வழக்கமான நினைவூட்டல்கள் மூலம் மக்கள் சரியான நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வழிவகை செய்கிறோம். இதயத்திலிருந்து ஒரு உறுதிமொழி பிரசாரத்தின் மூலம், சமூகம் முழுவதும் விழிப்புணர்வு மற்றும் ஆரம்பக்கட்டக் கண்டறிதலைத் தொடர்ச்சியாக ஊக்குவிக்க நம்புகிறோம் எனக் கூறினார்.சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இயங்கும் இலங்கையின் முதலாவது anonymous டிஜிட்டல் ஆலோசனைத் தளமான Yeheli.lk, ஆரோக்கியம், சட்டம் மற்றும் உளவியல் சமூக விவகாரங்கள் குறித்து நிபுணர்களால் சரிபார்க்கப்பட்ட ஆலோசனைகளை வழங்குகிறது. பகிரங்கமாகப் பேசக் கடினமாக இருக்கும் தலைப்புகள் குறித்து பாதுகாப்பான முறையில் தகவல்களைப் பெற இத்தளம் வழிவகுக்கிறது. மேலும், இதில் உள்ள AI தொழில்நுட்பத்தில் இயங்கும் Chat & Voice Bot மூலம் 24 மணிநேரமும் இலவசமாகவும் இரகசியமாகவும் ஆலோசனைகளைப் பெற முடியும். ‘இதயத்திலிருந்து ஒரு உறுதிமொழி’ முன்னெடுப்பின் மூலம், மார்பக ஆரோக்கியம் பற்றிய உரையாடலை ஒக்டோபர் மாதத்தைத் தாண்டியும் கொண்டு சென்று, பொதுமக்கள் நம்பகமான வழிகாட்டுதல்களைப் பெறவும், விழிப்புணர்வுடன் செயல்பட்டுத் தங்களது ஆரோக்கியத்திற்காக உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கவும் டயலொக் மற்றும் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளை இணைந்து பணியாற்றுகின்றன. மேலதிக விவரங்களுக்கு www.yeheli.lk என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

விபரங்களுக்கு
2026 ஆசிய விளையாட்டு விழாவுக்குச் செல்லும் இலங்கை அணிக்கு Dialog Axiata PLC அனுசரணை

2026 ஆசிய விளையாட்டு விழாவுக்குச் செல்லும் இலங்கை அணிக்கு Dialog Axiata PLC அனுசரணை

Dialog Axiata PLC, 2026 ஐச்சி-நகோயா ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள இலங்கை வீரர், வீராங்கனைகள் அடங்கிய அணிக்கு அனுசரணை வழங்கியுள்ளது.இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவுடன் இணைந்து, ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர், வீராங்கனைகளுக்கு இந்த அனுசரணை வழங்கப்படுவதாக Dialog Axiata PLC தெரிவித்துள்ளது.பல தசாப்தங்களாக இலங்கையின் விளையாட்டுத்துறைக்கு ஆதரவளித்து வரும் Dialog Axiata PLC, 2028ஆம் ஆண்டு வரை இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பு பங்காளராகவும் செயற்பட்டு வருகிறது.2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளை நீண்டகால இலக்காகக் கொண்டு, நாட்டின் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கான விரிவான திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த அனுசரணை வழங்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.2026 ஐச்சி-நகோயா ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை வீரர், வீராங்கனைகள் பெறும் அனுபவங்கள், அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் முக்கியமான ஒரு படியாக அமையும் என Dialog Axiata PLC தெரிவித்துள்ளது.மேலும், கிரிக்கெட், கரப்பந்தாட்டம் மற்றும் மின்னணு விளையாட்டுகள் (Esports) ஆகிய தேசிய அணிகளின் பிரதான அனுசரணையாளராகவும் Dialog Axiata PLC செயற்பட்டு வருகிறது.தேசிய பரா விளையாட்டு விழா மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை அணிகளுக்கும் நிறுவனம் ஆதரவு வழங்கி வருவதுடன், இலங்கை ஓபன் கோல்ஃப் போட்டி மற்றும் பரா ஒலிம்பிக் விளையாட்டுத்துறைக்கும் பிரதான அனுசரணையை வழங்கி வருகிறது.அத்துடன், எதிர்காலத்தில் செம்பியன்களை உருவாக்கும் நோக்கில், ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டப் போட்டி, தேசிய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட வலைப்பந்தாட்டப் போட்டிகள் மற்றும் பாடசாலை ரக்பி போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளுக்கும் Dialog Axiata PLC ஆதரவு வழங்கி வருகிறது.இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் உத்தியோகபூர்வ தொடர்பாடல் பங்காளராக, 2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளை நோக்கிய இலங்கையின் பயணத்திற்கும் Dialog Axiata PLC ஆதரவு வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
10 பில்லியன் டொலரைத் தாண்டிய இலங்கையின் ஏற்றுமதி வருமானம்!

10 பில்லியன் டொலரைத் தாண்டிய இலங்கையின் ஏற்றுமதி வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2026 ஆம் ஆண்டில் தொடர்ந்து வலிமையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மொத்த ஏற்றுமதி வருமானம் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.அதன்படி, 2026 ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் பொருட்கள் மற்றும் சேவைகள் மூலம் ஈட்டப்பட்ட மதிப்பிடப்பட்ட மொத்த ஏற்றுமதி வருமானம் 10.49 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 5.5 சதவீத அதிகரிப்பாகும்.ஒட்டுமொத்த ஏற்றுமதிச் செயல்பாட்டிற்குப் பொருட்கள் ஏற்றுமதியே அதிக பங்களிப்பை வழங்கி வந்துள்ளது. ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இந்தத் துறை 8.19 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளதுடன், இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 5.05 சதவீத அதிகரிப்பாகும். இலங்கை சுங்கத் திணைக்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிகத் தரவுகள் மற்றும் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத்துறை மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் தொடர்பான மதிப்பிடப்பட்ட ஏற்றுமதி மதிப்புகளின் அடிப்படையில், 2026 ஜூலை மாதத்தில் இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி 1.29 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. எனினும், இது 2025 ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது 1.3 சதவீத சிறிய வீழ்ச்சியைக் குறிக்கிறது.இதற்கிடையில், சேவை ஏற்றுமதித் துறையும் தனது நேர்மறையான வளர்ச்சி வேகத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் இந்தத் துறை 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிடப்பட்ட வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 7.02 சதவீத அதிகரிப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சேவை ஏற்றுமதியானது தொடர்ந்து விரிவடைந்து, 2026 ஜூலை மாதத்தில் சுமார் 351.92 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளதுடன், இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 3.75 சதவீத அதிகரிப்பாகும்.இதன் விளைவாக, 2026 ஜூலை மாதத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டின் மூலமான இலங்கையின் ஒருங்கிணைந்த ஏற்றுமதி வருமானம் சுமார் 1.64 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
சுத்தமாக்கப்பட்ட சிவனொளிபாதமலை : சியபத பினான்ஸின் பசுமை முன்னெடுப்பு திட்டம்

சுத்தமாக்கப்பட்ட சிவனொளிபாதமலை : சியபத பினான்ஸின் பசுமை முன்னெடுப்பு திட்டம்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, தனது 21ஆவது ஆண்டு நிறைவு மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த '2026 சிவனொளிபாதமலை சுத்திகரிப்பு திட்டம்' வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. கடந்த ஜூன் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. சியபத பினான்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மதிஷ ஹேவவித்தாரண மற்றும் சிரேஷ்ட நிர்வாகக் குழுவின் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்தத் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். இதன்போது ஒரே நாளில் சுமார் ஒரு டொன் அளவிலான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது. அத்துடன் புனித ஸ்தலத்தைப் பாதுகாப்பதற்கான கழிவு முகாமைத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான சிவனொளிபாதமலை சரணாலயம், நாட்டின் அபூர்வ தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் களனி, களு, வளவை ஆகிய முக்கிய ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளைக் கொண்டுள்ள சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். அதிகரித்து வரும் யாத்ரீகர்களின் வருகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைப்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும். சிவனொளிபாதமலை முதன்மை தலைமைத் துறவி பெங்கமுவே தம்மதின்ன தேரரின் வழிகாட்டுதலின் கீழ், மஸ்கெலிய பிரதேச சபை, வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் நல்லதண்ணி காவல்துறை ஆகியவற்றின் முழுமையான ஆதரவுடன் இந்த கூட்டுப் பாதுகாப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

விபரங்களுக்கு
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

இலங்கையின் முதன்மைத் தொலைத்தொடர்புச் சேவை வழங்கியும் விளையாட்டுத்துறையின் பிரதான அனுசரணையாளருமான Dialog Axiata PLC நிறுவனம், இந்தமுறை பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்குப் பெருமை சேர்த்த வீரர்களைச் சிறப்பாகக் கெளரவித்துள்ளது.இதற்கமைய, நேற்று (05) இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டு வீரர்களுக்கான மக்கள் வரவேற்பு வீதிப் பேரணியின் போது, Dialog Axiata PLC நிறுவனத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் இந்த கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.பொதுநலவாய விளையாட்டு வரலாற்றில் தடகளப் பிரிவில் இலங்கைக்காக முதன்முறையாகத் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாலித பண்டார ஆகியோருக்கு, Dialog Axiata PLC நிறுவனத்தின் குழுமத் தலைமைச் செயல் அதிகாரி சுபுன் வீரசிங்கவினால் சிறப்புப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.2028 லொஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டி வரை இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பு பங்காளியாகச் செயற்படும் டயலொக் நிறுவனம், நாட்டின் முதன்மை ஒலிம்பிக் எதிர்பார்ப்பான ருமேஷ் தரங்க உள்ளிட்ட திறமையாளர்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுத்துறையின் முதன்மை அனுசரணையாளராகப் பாலித பண்டார உள்ளிட்ட விளையாட்டு வீரர்களையும் தொடர்ந்து பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

விபரங்களுக்கு
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More
தனுஷுக்கு வில்லனாக நடிக்க மறுத்த தேவா! : என்ன படம் தெரியுமா?

தனுஷுக்கு வில்லனாக நடிக்க மறுத்த தேவா! : என்ன படம் தெரியுமா?

நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘ராயன்’ திரைப்படத்தில், எஸ்.ஜே.சூர்யா நடித்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் இசையமைப்பாளர் தேவாவிடம் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியுள்ள இசையமைப்பாளர் தேவா, ‘ராயன்’ திரைப்படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடிக்குமாறு தனுஷ் தரப்பில் தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அப்போது தனுஷிடம், "ஏன் என்னை இந்த கதாபாத்திரத்திற்குத் தேர்வு செய்தீர்கள்?" எனத் தேவா கேட்டதற்கு, "நீங்கள் தான் சென்னை மொழிநடை (ஸ்லாங்) சிறப்பாகப் பேசுவீர்கள்" என்று தனுஷ் கூறியுள்ளார். இருப்பினும், "எனக்கு நடிப்பு வராது" என்று கூறி அந்த வாய்ப்பை தேவா மறுத்துவிட்டதால், அதன்பின்னரே அந்தக் கதாபாத்திரம் எஸ்.ஜே.சூர்யாவுக்குச் சென்றுள்ளது.

விபரங்களுக்கு
பொக்ஸ் ஓபிஸில் ரஜினியின் சாம்ராஜ்யம்: வெளியிட்ட இரண்டே நாட்களில் வசூல் வேட்டை!

பொக்ஸ் ஓபிஸில் ரஜினியின் சாம்ராஜ்யம்: வெளியிட்ட இரண்டே நாட்களில் வசூல் வேட்டை!

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜெயிலர் 2' இந்த திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த நிலையில் குறித்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இரண்டே நாட்களில், இந்தியாவில் மட்டும் ரூ.112.10 கோடியும், வெளிநாடுகளில் ரூ.97 கோடியும் வசூலித்துள்ளது. இதன்மூலம் 'ஜெயிலர் 2' திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் உலகளவில் மொத்தமாக ரூ.209.10 கோடியை வசூலித்து மாபெரும் வசூல் வேட்டையை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

விபரங்களுக்கு
திரிஷாவின் புதிய புகைப்படம் - நயன்தாரா செய்த அந்த ஒரு செயல்! ரசிகர்கள் கவனித்தது என்ன?

திரிஷாவின் புதிய புகைப்படம் - நயன்தாரா செய்த அந்த ஒரு செயல்! ரசிகர்கள் கவனித்தது என்ன?

நடிகை திரிஷா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படத்துக்கு நடிகை நயன்தாரா விருப்பம் தெரிவித்துள்ளமை, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. புடவையில் அழகாகத் தோன்றும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள திரிஷா, அதனுடன் தீபங்கள் ஒளிரட்டும் என்ற பொருள்படும் வகையிலான வாசகத்தையும் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்துக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வரும் நிலையில், நயன்தாரா அதற்கு விருப்பம் தெரிவித்துள்ளமையும் பேசுபொருளாகியுள்ளது.தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளாகத் திகழும் திரிஷா மற்றும் நயன்தாரா இடையே நட்பு உள்ளதா என்பது குறித்து அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் இடம்பெற்று வந்துள்ளன.முன்னதாக, திரிஷாவுடனான நட்பு குறித்து நயன்தாரா அளித்திருந்த கருத்துகள் தொடர்பாகவும் பல்வேறு ஊகங்கள் வெளியாகியிருந்தன. இருப்பினும், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகக் கூறப்படுவதை உறுதிப்படுத்தும் தகவல்கள் வெளியாகவில்லை.இந்தநிலையில், கடந்த ஜனவரி மாதம் டுபாயில் சொகுசுப் படகில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தனர். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலான கவனத்தைப் பெற்றதுடன், இருவருக்கும் இடையிலான உறவு குறித்த விவாதங்களையும் மீண்டும் ஏற்படுத்தியிருந்தன.தற்போது திரிஷாவின் புதிய புகைப்படத்துக்கு நயன்தாரா விருப்பம் தெரிவித்துள்ளமையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.திரை நட்சத்திரங்களின் சிறிய சமூக வலைத்தளச் செயல்பாடுகள்கூட ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தும் நிலையில், திரிஷா மற்றும் நயன்தாரா தொடர்பான இந்தப் பதிவும் தற்போது கவனத்தைப் பெற்றுள்ளது.

விபரங்களுக்கு
அனிருத் – காவ்யா மாறன் திருமணம்: தமிழக முதலமைச்சர் விஜய்க்கு நேரில் அழைப்பு!

அனிருத் – காவ்யா மாறன் திருமணம்: தமிழக முதலமைச்சர் விஜய்க்கு நேரில் அழைப்பு!

பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் - இசையமைப்பாளர் அனிருத் திருமணம் உறுதியாகியுள்ள நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. சமீபமாகவே அவரது திருமணம் குறித்து நிறைய வதந்திகள் வலம் வந்தன. அப்படி சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுடன் திருமணம் நடக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தது. தற்போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்புக்கு பிரபலங்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார் பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறன். நேற்று தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்ததன் மூலம் அனிருத் - காவ்யா திருமணம் உறுதியாகியுள்ளது. காவ்யா மாறன் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, நவம்பர் 21 ஆம் திகதி சென்னையில் நடைபெற இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். திருமணத்தில் இரு குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுடன் முக்கியமான பிரபலங்களும் கலந்துகொள்ள உள்ளதாகவும் இதற்காக 4 தனி வானூர்திகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விபரங்களுக்கு
திரையுலகிலும் மாஸ்... பந்தய களத்திலும் மாஸ்... வைரலாகும் அஜீத்தின் அறிக்கை!

திரையுலகிலும் மாஸ்... பந்தய களத்திலும் மாஸ்... வைரலாகும் அஜீத்தின் அறிக்கை!

பிரபல முன்னணி நடிகர் அஜீத்குமார், 2026 ஆம் ஆண்டிற்கான தனது சர்வதேச சிற்றூந்து பந்தய போட்டிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வருடத்தின் பந்தயப் பயணம் மிகவும் சிறப்பானதாகவும் மறக்க முடியாத அனுபவமாகவும் அமைந்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் பயணத்தை மறக்க முடியாத ஒன்றாக மாற்றியமைத்த தனது பந்தய அணியினர், ஆதரவளித்த விளம்பர உதவியாளர்கள் மற்றும் அன்பைப் பொழிந்த ரசிகர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். திரைப்படங்களில் அதிகமாக நடித்து வரும் நிலையிலும், மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தயங்களில் தீவிர ஆர்வம் காட்டி வரும் நடிகர் அஜீத்குமார், சர்வதேச அளவிலான சிற்றூந்து பந்தய போட்டிகளில் பங்கேற்று இந்தியக் கொடியை ஏந்தி நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

விபரங்களுக்கு
வைரலாகும் எஸ்.ஜே. சூர்யாவின் நேர்காணல் : சிலிர்த்துப் போன சினிமா ரசிகர்கள்!

வைரலாகும் எஸ்.ஜே. சூர்யாவின் நேர்காணல் : சிலிர்த்துப் போன சினிமா ரசிகர்கள்!

அண்மைய நேர்காணல் ஒன்றில் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவிடம் இந்தியாவில் சிறப்பாக நடிக்கும் நடிப்பு அரக்கி யார்? என கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் வெளிப்படையாகத் தெரிவித்த கருத்துக்கள் தற்போது சினிமா வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்தியாவில் மிரட்டலான நடிப்பை வழங்கும் திறமைசாலிகளாக அவர் மமிதா பைஜூ மற்றும் ஆலியா பாட் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார். அண்மைக்காலமாகத் தனது யதார்த்தமான மற்றும் தனித்துவமான நடிப்பால் ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகின் கவனத்தையும் ஈர்த்துவரும் மமிதா பைஜூவின் வளர்ச்சியைப் புகழ்ந்த அவர், மறுபுறம் வட இந்தியாவில் தனது அசாத்திய நடிப்பால் உச்சம் தொட்டுவரும் ஆலியா பாட்டின் திறமையையும் சிலிர்ப்புடன் குறிப்பிட்டுள்ளார். திறமையான நடிகைகளைத் திறம்பட அடையாளம் கண்டு எஸ்.ஜே. சூர்யா பாராட்டியுள்ள இந்த விடயம் தற்போது இணையத்தில் சினிமா ரசிகர்களால் வைரலாகப் பேசப்பட்டு வருகிறது.

விபரங்களுக்கு
முக்கிய இரு பிரபலங்கள் தொடர்பில் கசிந்த இரகசியம்!

முக்கிய இரு பிரபலங்கள் தொடர்பில் கசிந்த இரகசியம்!

பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகளும், ஐதராபாத் சன்ரைசர்ஸ் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறன் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே இவர்களின் காதல்குறித்த தகவல்கள் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது இருவரும் அதிகாரப்பூர்வமாகத் திருமண வாழ்க்கையில் இணையவுள்ளனர். இவர்கள் எதிர்வரும் நவம்பர் 11-ஆம் திகதி அன்று திருமண பந்தத்தில் இணையவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆரம்பத்தில் செஷல்ஸ் நாட்டில் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அழகிய சுற்றுலாத் தலமான கிரீஸ் நாடு இதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இசை மற்றும் கிரிக்கெட் உலகைச் சேர்ந்த இரு முக்கிய பிரபலங்கள் இணையவிருப்பதால், திரைத்துறை வட்டாரத்திலும் கிரிக்கெட் வட்டாரத்திலும் இந்த நிகழ்வு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இவர்களுக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

விபரங்களுக்கு

"காலங்கள் மாறினாலும் மக்களின் அன்பு மாறவில்லை"- 'ஜெயிலர் 2' படத்தையும் ரஜினியின் உழைப்பையும் பாராட்டி சீமான் நெகிழ்ச்சிப் பதிவு!

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாகத் திகழும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், ரசிகர்களின் பேரன்பையும் பெரும் வரவேற்பையும் பெற்று வெற்றி நடைபோட்டு வருவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நடிக்கத் தொடங்கி 50 ஆண்டுகளைக் கடந்த பின்னரும், தனது முதல் திரைப்படத்தில் எத்தகைய ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் நடித்தாரோ, அதே ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் இன்றளவும் ஒவ்வொரு படைப்பிலும் ரஜினிகாந்த் காட்டி வருகிறார். அவரது இந்த அசைக்க முடியாத அர்ப்பணிப்புதான் அவரது தொடர் வெற்றிப் பயணத்தின் அடிப்படையாகும் என தெரிவித்துள்ளார். தலைமுறைகள் கடந்தும் அவர் மீது ரசிகர்கள் கொண்டிருக்கும் ஈர்ப்பிற்கு இதுவே முதற்காரணமாகும். புகழின் உச்சத்தை அடைந்த பின்னரும், நான்கு தலைமுறை இயக்குநர்களுடன் இணைந்து நடித்த பின்னரும், ஒவ்வொரு திரைப்படத்தையும் ஒரு புதிய தொடக்கமாகக் கருதி அவர் உழைக்கிறார். இதன் காரணமாகவே, காலங்கள் மாறினாலும், திரைமொழியும் தொழில்நுட்பமும் மாறினாலும், மக்களுடன் அவர் ஏற்படுத்திக்கொண்ட அன்புப் பிணைப்பு ‘ஜெயிலர் 2’ வெற்றி வரை மேலும் வலுப்பெற்று வருகிறது என சீமான் தனது பதிவில் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes