Top Story
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கிய பணிப்புரைக்கு அமைய இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் உயிரிழப்புகள், மக்கள் இடம்பெயர்வு மற்றும் பாரிய சொத்துச் சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவசர மனிதாபிமான மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒற்றுமையை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இந்த நெருக்கடியான தருணத்தில் நேபாள மக்களுடன் இலங்கை உறுதியாக நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நேபாள வெளிவிவகார அமைச்சர் சிசிர் கானல் உடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது நேபாள மக்களுக்கு இலங்கையின் அனுதாபம், ஆதரவு மற்றும் ஒற்றுமையை அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நேபாள அரசாங்கத்துடன் நெருக்கமாக இணைந்து செயற்படவுள்ளதாகவும், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு இலங்கையால் வழங்கக்கூடிய மேலதிக உதவிகள் தொடர்பிலும் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும் எனவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
விபரங்களுக்கு
General27 August 2026
நேபாள வெள்ளப் பேரிடர்: இலங்கையிடமிருந்து நிவாரணப் பணிகளுக்காக 1 மில்லியன் டொலர் நிதியுதவி!
International News

நேபாள பேரிடர்: தொடர்ந்து கைகொடுக்கும் இந்தியா – இரண்டாம் கட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு!

International 28 August 2026
நேபாள பேரிடர்: தொடர்ந்து கைகொடுக்கும் இந்தியா – இரண்டாம் கட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு!

தக்காளிக் குளியலில் திளைத்த ஸ்பெயின் - கோலாகலமாக நடைபெற்ற 'லா டொமாட்டினா' திருவிழா

International 28 August 2026
 தக்காளிக் குளியலில் திளைத்த ஸ்பெயின் - கோலாகலமாக நடைபெற்ற 'லா டொமாட்டினா' திருவிழா

உச்சக்கட்ட திருப்பம்: சீமானுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய விஜயலட்சுமி!

International 28 August 2026
உச்சக்கட்ட திருப்பம்: சீமானுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய விஜயலட்சுமி!

தமிழகத்தில் நலத்திட்டங்களை சொந்தப்பணத்தில் செய்யும் விஜய்?

International 28 August 2026
 தமிழகத்தில் நலத்திட்டங்களை சொந்தப்பணத்தில் செய்யும் விஜய்?

இந்தியாவில் மோடியின் செல்வாக்கு குறையவில்லை : பிரதமர் போட்டிக்களத்தின் முதல் மூன்று பேரில் விஜய்யும் உள்ளடக்கம்

International 28 August 2026
இந்தியாவில் மோடியின் செல்வாக்கு குறையவில்லை : பிரதமர் போட்டிக்களத்தின் முதல் மூன்று பேரில் விஜய்யும் உள்ளடக்கம்

நேபாளம், திபெத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால், உயிர்த் தப்பியவர்களை தேடும் பணிகள் தொடர்கின்றன.

International 28 August 2026
நேபாளம், திபெத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால், உயிர்த் தப்பியவர்களை தேடும் பணிகள் தொடர்கின்றன.

குத்துச்சண்டை போட்டாலும் , தொழிற்சாலை பணிகளில் சோம்பேறிகளான சீன ரோபோக்கள்

International 28 August 2026
 குத்துச்சண்டை போட்டாலும் , தொழிற்சாலை பணிகளில் சோம்பேறிகளான சீன ரோபோக்கள்

நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் (89) உடல்நலக்குறைவு- கவலைக்கிடமான நிலை

International 28 August 2026
நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் (89) உடல்நலக்குறைவு- கவலைக்கிடமான நிலை

அமெரிக்க மத்திய உளவுத்தலைவரின் ரஷ்ய பயணத்தின் இரகசியம் வெளியானது?

International 28 August 2026
அமெரிக்க மத்திய உளவுத்தலைவரின் ரஷ்ய பயணத்தின் இரகசியம் வெளியானது?

வேரறுக்கப்பட்ட பாரம்பரியம்: மேற்கு கரையில் ஒலிவ் மரங்களை அழித்த இஸ்ரேலிய குடியேறிகள்!

International 28 August 2026
வேரறுக்கப்பட்ட பாரம்பரியம்: மேற்கு கரையில் ஒலிவ் மரங்களை அழித்த இஸ்ரேலிய குடியேறிகள்!

ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் தாங்கிக் கப்பல் மீது தாக்குதல்

International 28 August 2026
ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் தாங்கிக் கப்பல் மீது தாக்குதல்

ஆயுள் தண்டனை பெற்றிருந்த பொஸ்னிய படையதிகாரி சிறைக்குள் மரணம்!

International 28 August 2026
ஆயுள் தண்டனை பெற்றிருந்த பொஸ்னிய படையதிகாரி சிறைக்குள் மரணம்!

ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்ற ஈரான் - கட்டார் கூட்டுத் திட்டம்: தெஹ்ரானில் முக்கிய பேச்சுவார்த்தை!

International 28 August 2026
ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்ற ஈரான் - கட்டார் கூட்டுத் திட்டம்: தெஹ்ரானில் முக்கிய பேச்சுவார்த்தை!

குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தவில்லை – உயர்நீதிமன்றத்தில் விஜய் தரப்பு விளக்கம்!

International 27 August 2026
குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தவில்லை – உயர்நீதிமன்றத்தில் விஜய் தரப்பு விளக்கம்!

தமிழக சட்டமன்றத்தில் அனல் பறந்த விவாதம்! திமுக – தவெக உறுப்பினர்களிடையே கடும் கருத்து மோதல்

International 27 August 2026
தமிழக சட்டமன்றத்தில் அனல் பறந்த விவாதம்! திமுக – தவெக உறுப்பினர்களிடையே கடும் கருத்து மோதல்
More News
General27 August 2026

நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு: உயிரிழப்புகள் 359 ஆக அதிகரிப்பு - 1,400 பேர் காணவில்லை

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குறைந்தது 359 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 1,400 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளம், நேபாளத்திலும் அதனை ஒட்டிய திபெத் தன்னாட்சிப் பிராந்தியத்திலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காணாமல் போனவர்களைத் தேடும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அனர்த்தத்தின் முழுமையான பாதிப்பு குறித்து மதிப்பீடுகள் இடம்பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபரங்களுக்கு
நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு: உயிரிழப்புகள் 359 ஆக அதிகரிப்பு - 1,400 பேர் காணவில்லை
General27 August 2026

அதிகரிக்கும் வெப்பம் - வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

சில பகுதிகளில் நாளை (28) பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் 'எச்சரிக்கை' நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த வெப்பமான காலநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளியில் நீண்ட நேரம் வெளியில் இருப்பது சோர்வு மற்றும் தசப்பிடிப்புக்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பொதுமக்கள் போதியளவு நீரைப் பருகுமாறும், வெளிப்புற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விபரங்களுக்கு
அதிகரிக்கும் வெப்பம் - வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
General27 August 2026

இந்தியா – இலங்கை 2ஆவது டெஸ்ட் சமனிலையில் முடிவு – தொடரை 1-0 எனக் கைப்பற்றியது இந்தியா

கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (27) சமனிலையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இரண்டாவது போட்டியின் இறுதி நாளில் இலங்கை அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 9 விக்கெட்களை இழந்து 429 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்துவதாக அறிவித்தது.இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணியின் பின்வரிசை வீரர்களுடன் இணைந்து சொனால் தினுஷ போராட்டமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் 264 பந்துகளை எதிர்கொண்ட சொனால் தினுஷ, 8 நான்கு ஓட்டங்கள் மற்றும் 2 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 133 ஓட்டங்களைப் பெற்றார்.முன்னதாக, நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 9 விக்கெட்டுகளை இழந்து 503 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தனது முதல் இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டது. இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில் 290 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.இதனால், 213 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் ஃபாலோ-ஆன் பெற்ற இலங்கை அணி, 2 ஆவது இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், 9 விக்கெட்டுகளை இழந்து 429 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.சொனால் தினுஷவுடன் இணைந்து பசிந்து சூரியபண்டார 92 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 55 ஓட்டங்களையும், கேசர நுவந்த 46 ஓட்டங்களையும் பெற்று, இலங்கை அணியின் போராட்டத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கினர்.இதன் மூலம் 2 ஆவது டெஸ்ட் போட்டி சமனிலையில் முடிவடைந்தது. எனினும், முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றியுள்ளது. எனினும், முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றியுள்ளது.

விபரங்களுக்கு
இந்தியா – இலங்கை 2ஆவது டெஸ்ட் சமனிலையில் முடிவு – தொடரை 1-0 எனக் கைப்பற்றியது இந்தியா
General27 August 2026

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு போத்தல் குடிநீர் விற்பனை – உணவகத்திற்கு அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையின் யாழ்ப்பாண மாவட்ட விசாரணை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்த முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது.இதன்போது, ஒரு லீற்றர் போத்தல் குடிநீருக்கு 120 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி, குறித்த உணவகம் அதனை 200 ரூபாய்க்கு நுகர்வோரிடம் விற்பனை செய்தமை கண்டறியப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கையின் அடிப்படையில், நீதிமன்றம் குறித்த உணவகத்திற்கு 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

விபரங்களுக்கு
யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு போத்தல் குடிநீர் விற்பனை – உணவகத்திற்கு அபராதம்
General27 August 2026

நேபாள வெள்ளப்பெருக்கு : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரிப்பு

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், 1,500க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காணாமல் போனவர்களில் 517 பேர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எனவும், 127 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபரங்களுக்கு
நேபாள வெள்ளப்பெருக்கு : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரிப்பு
International News

நேபாள பேரிடர்: தொடர்ந்து கைகொடுக்கும் இந்தியா – இரண்டாம் கட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு!

International 28 August 2026
நேபாள பேரிடர்: தொடர்ந்து கைகொடுக்கும் இந்தியா – இரண்டாம் கட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு!

தக்காளிக் குளியலில் திளைத்த ஸ்பெயின் - கோலாகலமாக நடைபெற்ற 'லா டொமாட்டினா' திருவிழா

International 28 August 2026
 தக்காளிக் குளியலில் திளைத்த ஸ்பெயின் - கோலாகலமாக நடைபெற்ற 'லா டொமாட்டினா' திருவிழா

உச்சக்கட்ட திருப்பம்: சீமானுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய விஜயலட்சுமி!

International 28 August 2026
உச்சக்கட்ட திருப்பம்: சீமானுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய விஜயலட்சுமி!

தமிழகத்தில் நலத்திட்டங்களை சொந்தப்பணத்தில் செய்யும் விஜய்?

International 28 August 2026
 தமிழகத்தில் நலத்திட்டங்களை சொந்தப்பணத்தில் செய்யும் விஜய்?

இந்தியாவில் மோடியின் செல்வாக்கு குறையவில்லை : பிரதமர் போட்டிக்களத்தின் முதல் மூன்று பேரில் விஜய்யும் உள்ளடக்கம்

International 28 August 2026
இந்தியாவில் மோடியின் செல்வாக்கு குறையவில்லை : பிரதமர் போட்டிக்களத்தின் முதல் மூன்று பேரில் விஜய்யும் உள்ளடக்கம்

நேபாளம், திபெத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால், உயிர்த் தப்பியவர்களை தேடும் பணிகள் தொடர்கின்றன.

International 28 August 2026
நேபாளம், திபெத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால், உயிர்த் தப்பியவர்களை தேடும் பணிகள் தொடர்கின்றன.

குத்துச்சண்டை போட்டாலும் , தொழிற்சாலை பணிகளில் சோம்பேறிகளான சீன ரோபோக்கள்

International 28 August 2026
 குத்துச்சண்டை போட்டாலும் , தொழிற்சாலை பணிகளில் சோம்பேறிகளான சீன ரோபோக்கள்

நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் (89) உடல்நலக்குறைவு- கவலைக்கிடமான நிலை

International 28 August 2026
நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் (89) உடல்நலக்குறைவு- கவலைக்கிடமான நிலை

அமெரிக்க மத்திய உளவுத்தலைவரின் ரஷ்ய பயணத்தின் இரகசியம் வெளியானது?

International 28 August 2026
அமெரிக்க மத்திய உளவுத்தலைவரின் ரஷ்ய பயணத்தின் இரகசியம் வெளியானது?

வேரறுக்கப்பட்ட பாரம்பரியம்: மேற்கு கரையில் ஒலிவ் மரங்களை அழித்த இஸ்ரேலிய குடியேறிகள்!

International 28 August 2026
வேரறுக்கப்பட்ட பாரம்பரியம்: மேற்கு கரையில் ஒலிவ் மரங்களை அழித்த இஸ்ரேலிய குடியேறிகள்!

ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் தாங்கிக் கப்பல் மீது தாக்குதல்

International 28 August 2026
ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் தாங்கிக் கப்பல் மீது தாக்குதல்

ஆயுள் தண்டனை பெற்றிருந்த பொஸ்னிய படையதிகாரி சிறைக்குள் மரணம்!

International 28 August 2026
ஆயுள் தண்டனை பெற்றிருந்த பொஸ்னிய படையதிகாரி சிறைக்குள் மரணம்!

ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்ற ஈரான் - கட்டார் கூட்டுத் திட்டம்: தெஹ்ரானில் முக்கிய பேச்சுவார்த்தை!

International 28 August 2026
ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்ற ஈரான் - கட்டார் கூட்டுத் திட்டம்: தெஹ்ரானில் முக்கிய பேச்சுவார்த்தை!

குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தவில்லை – உயர்நீதிமன்றத்தில் விஜய் தரப்பு விளக்கம்!

International 27 August 2026
குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தவில்லை – உயர்நீதிமன்றத்தில் விஜய் தரப்பு விளக்கம்!

தமிழக சட்டமன்றத்தில் அனல் பறந்த விவாதம்! திமுக – தவெக உறுப்பினர்களிடையே கடும் கருத்து மோதல்

International 27 August 2026
தமிழக சட்டமன்றத்தில் அனல் பறந்த விவாதம்! திமுக – தவெக உறுப்பினர்களிடையே கடும் கருத்து மோதல்
Sports Stories
Explore More
முன்னாள் ஆண் கிரிக்கெட் வீரர், அவுஸ்திரேலிய பெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அனுமதி!

முன்னாள் ஆண் கிரிக்கெட் வீரர், அவுஸ்திரேலிய பெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அனுமதி!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகளான அனயா பங்கர் (Anaya Bangar), அவுஸ்திரேலியாவில் பெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அனுமதி பெற்றுள்ளார். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட அனயா பங்கர், 2027 மார்ச் மாதத்தில் எலைட் மகளிர் கிரிக்கெட்டில் விளையாடும் இலக்குடன் அவுஸ்திரேலியாவில் உள்ளூர் போட்டிகளில் களமிறங்கத் தயாராகி வருகிறார். அவுஸ்திரேலிய கிரிக்கெட் சங்கத்தின் (Cricket Australia) கொள்கைப்படி, மகளிர் எலைட் பிரிவில் போட்டியிட விரும்பும் வீரர்களின் இரத்த டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்தபட்சம் 12 மாதங்களுக்கு தொடர்ந்து 10 nmol/L-க்கு கீழே இருக்க வேண்டும். அனயா பங்கர் வழங்கிய மருத்துவத் தகவல்களின் அடிப்படையில், 2027 மார்ச் மாதத்தில் இந்த 12 மாத காலத் தேவை பூர்த்தி செய்யப்படும் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. அதன் பிறகு இரத்தப் பரிசோதனை மூலம் டெஸ்டோஸ்டிரோன் அளவு தொடர்ந்து உரிய வரம்பிற்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்தநிலையில், தகுதி பெறுவது என்பது அணியில் இடம்பிடிப்பதை உறுதி செய்யாது என்றும், தனது திறமையை நிரூபித்து அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்றும் அனயா பங்கர் தெரிவித்தார். மகளிர் பிக் பாஷ் லீக் (WBBL) போட்டிகளில் விளையாடுவதே தனது லட்சியம் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில், திருநங்கைகள் பங்கேற்க முடியாது என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை 2023-ல் தடை விதித்துள்ளது. எனினும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் உள்நாட்டு விதிகளும் சர்வதேச கிரிக்கட் பேரவையின் விதிகளும் மாறுபட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
பெர்லின் மரதனில் இருந்து விலகிக்கொண்ட சாதனை வீரர்!

பெர்லின் மரதனில் இருந்து விலகிக்கொண்ட சாதனை வீரர்!

இரண்டு மணி நேரத்திற்குள் மரதன் ஓட்டத்தை நிறைவு செய்த உலகின் சாதனைக் வீரரான செபஸ்டியன் சாவே (Sebastian Sawe), காயம் காரணமாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள பெர்லின் மரதன் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த மரதன் செப்டம்பர் 27 அன்று பெர்லினில் நடைபெறவுள்ளது. இதுவே, கடந்த ஏப்ரல் மாதம் லண்டன் மரதனில் 1 மணி 59 நிமிடம் 30 விநாடிகளில் இலக்கைக் கடந்து உலக சாதனை படைத்ததன் பின்னர், சாவேயின் முதல் பந்தயமாக இருந்தது. எனினும் , "காயம் காரணமாக பெர்லின் மரதனில் இருந்து தாம் விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று , 31 வயதான கென்யா நாட்டைச் சேர்ந்த சாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பெர்லின் மரதனின் தட்டையான பாதை உலக சாதனைகளுக்குப் பெயர் பெற்றது. கடந்த 2025 பெர்லின் மரதன் போட்டியில் கடும் வெப்பத்தையும் தாண்டி 2:02:16 மணி நேரத்தில் சாவே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
இங்கிலாந்து வீரர் கார்ஸ் தொடர்பில் காவல்துறை விசாரணை !

இங்கிலாந்து வீரர் கார்ஸ் தொடர்பில் காவல்துறை விசாரணை !

வார இறுதியில் டெர்பி நகரில் உள்ள இரவு விடுதிக்கு வெளியே இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸ் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. லோர்ட்ஸில் இன்று ஆரம்பித்துள்ள பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியிலிருந்து கார்ஸ் நீக்கப்பட்டுள்ளார். முன்னதாக, டெர்பியில் உள்ள ஒரு இரவு விடுதிக்கு வெளியே இயல்பற்ற நிலை ஏற்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் அந்தப் பகுதியை விட்டு வெளியேற ஒப்புக்கொண்டதால் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், கிரிக்கெட் ஒழுங்குமுறை ஆணையகமும் (Cricket Regulator) விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், டெர்பி நகர் மையத்தில் நடந்த தாக்குதல் முறைப்பாடுகள் குறித்து விசாரித்து வருவதாகவும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. கார்ஸ் மீது குற்றச்சாட்டு உள்ளதா என்பது குறித்து இதுவரை எந்தத் தெளிவும் இல்லை. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை இந்த விவகாரம் குறித்து இன்னும் பொதுவில் கருத்து தெரிவிக்கவில்லை. முன்னதாக, சனிக்கிழமை இரவில் மதுபானம் அருந்திவிட்டு பிரச்சினையில் ஈடுபட்டதாக அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்திருந்தது. அணியில் மீண்டும் மீண்டும் இதுபோன்று மது தொடர்பான சம்பவங்கள் நடப்பது குறித்து டெஸ்ட் அணியின் தலைவர் ஜோ ரூட் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அணியினர் களத்திற்கு வெளியே இதுபோன்ற முட்டாள்தனமான தவறுகளைச் செய்வது கவனத்தை திசை திருப்புவதாக அவர் தெரிவித்தார்.

விபரங்களுக்கு
ஈட்டி எறிதல்  போட்டியில் உலகை வென்ற இலங்கை வீரர் !

ஈட்டி எறிதல் போட்டியில் உலகை வென்ற இலங்கை வீரர் !

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெற்ற 2026 டையமண்ட் லீக் தடகள தொடரில், இலங்கையின் முன்னணி வீரர் ருமேஷ் தரங்க ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றுள்ளார். ருமேஷ் தரங்க 92.07 மீற்றர் தூரம் எறிந்து தனது உலகத் தரத்திலான திறமையை மீண்டும் நிரூபித்துள்ளதோடு ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரெனடா) – 86.93 மீற்றர் தூரம் எறிந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார். போலந்தைச் சேர்ந்த டாவிட் வேக்னர் 85.16 மீற்றர் தூரம் எறிந்து மூன்றாம் இடத்தைப் பெற்றார். போட்டியின் தொடக்கத்தில் இருந்தே கடும் போட்டி நிலவிய போதிலும், இரண்டாம் இடம் பிடித்த பீட்டர்ஸை விட 5.14 மீற்றர் கூடுதல் தூரம் எறிந்து ருமேஷ் தனது ஆதிக்கத்தை முழுமையாகச் செலுத்தினார்.

விபரங்களுக்கு
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : முதல் நாளில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அபாரம்!

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : முதல் நாளில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அபாரம்!

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. புகழ்பெற்ற லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய 2 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், பாகிஸ்தான் அணியின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து அணி தனது சொந்த மண்ணிலேயே தடுமாறியுள்ளது. நாணய சுழற்சியில் (Toss) வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. மழை மற்றும் போதிய வெளிச்சமின்மையால் தாமதமாகத் தொடங்கிய போட்டியில், இங்கிலாந்து அணியின் முன்னணி விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டன. பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அப்பாஸ் (Mohammad Abbas) 15 ஓவர்களில் 56 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியின் முக்கியமான துடுப்பாட்டக்காரர்களை வெளியேற்றினார். எனினும் இங்கிலாந்து அணியின் ஜோர்டான் காக்ஸ் (55) மற்றும் ஜேமி ஸ்மித் (61) ஆகியோர் தங்களது அரைசதங்களை பூர்த்தி செய்து அணியைச் சரிவிலிருந்து மீட்கப் போராடினர். இறுதியில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் மீண்டும் நெருக்கடி அளித்து, இங்கிலாந்தின் கடைசி கட்ட விக்கெட்டுகளைச் வீழ்த்தினர். இந்த நிலையில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 56 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 248 ஓட்டங்களை எடுத்துள்ளது. மோசமான வெளிச்சம் காரணமாக முதல் நாள் ஆட்டம் சற்று முன்னதாகவே நிறைவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
ஃபிஃபா தலைவருக்கு எதிராக சுவிட்ஸர்லாந்தில் வழக்கு -தயாராகும் ஆவணங்கள்!

ஃபிஃபா தலைவருக்கு எதிராக சுவிட்ஸர்லாந்தில் வழக்கு -தயாராகும் ஆவணங்கள்!

ஃபிஃபா (FIFA) தலைவர் கியானி இன்பான்டினோவுக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் வழக்கைத் தாக்கல் செய்ய ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, புளோரிடாவில் உள்ள ஃபிஃபா நிறுவனங்களிடமிருந்து சாட்சியங்களையும் ஆவணங்களையும் பெற அமெரிக்க பிராந்திய நீதிமன்றத்தின் அனுமதியை, ஐரோப்பிய கால்பந்தாட்ட ஒன்றியம் கோரியுள்ளது. முன்னதாக, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உலகக் கிண்ண மற்றும் கழக உலகக் கிண்ணம் தொடர்பான வணிக உரிமைகளை "ஃபிஃபா ஃபார்வர்ட் என்டர்பிரைஸ்" (FFE) என்ற புதிய துணை நிறுவனத்திற்கு மாற்றும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. எனினும் கடும் எதிர்ப்பினால், அது கைவிடப்பட்டது. இந்தநிலையில் குறித்த திட்டம் எவ்வாறு திட்டமிடப்பட்டது, வடிவமைக்கப்பட்டது மற்றும் அங்கீகரிக்கப்பட்டது என்பது தொடர்பான ஆவணங்களையும் சாட்சிகளையும் புளோரிடாவை தளமாகக் கொண்ட நீதிமன்றிடம் இருந்து எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

விபரங்களுக்கு
25 வருடங்களுக்கு பின்னர் பிரையன் லாராவின் சாதனையை முறியடித்த சொனால் தினுஷ

25 வருடங்களுக்கு பின்னர் பிரையன் லாராவின் சாதனையை முறியடித்த சொனால் தினுஷ

கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற இலங்கை – இந்தியா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் சொனால் தினுஷ சாதனை சதம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இது சொனால் தினுஷவின் 3ஆவது டெஸ்ட் சதம் என்பதுடன், தொடர்ச்சியாக அவர் பதிவு செய்த 2ஆவது சதமாகவும் அமைந்துள்ளது.இதன்மூலம், எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியொன்றில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் தொடர்ச்சியாக சதம் பதிவு செய்த முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் பிரையன் லாராவின் சாதனையை சொனால் தினுஷ சமன் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரையன் லாரா கடந்த 2001ஆம் ஆண்டு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இந்த சாதனையை பதிவு செய்திருந்தார்.சுமார் 25 வருடங்களுக்கு பின்னர், சொனால் தினுஷவும் அதே மைதானத்தில் தொடர்ச்சியாக இரண்டு இன்னிங்ஸ்களில் சதம் பதிவு செய்து சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

விபரங்களுக்கு
தொடர் ஆட்டத்தில் மிரட்டும் சோனல் தினுஷ - சச்சினுடன் ஒப்பிட்ட பிசிசிஐ துணைத் தலைவர் புகழாரம்

தொடர் ஆட்டத்தில் மிரட்டும் சோனல் தினுஷ - சச்சினுடன் ஒப்பிட்ட பிசிசிஐ துணைத் தலைவர் புகழாரம்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இலங்கை வீரர் சோனல் தினுஷவை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா பாராட்டியுள்ளார். “இலங்கையின் சோனல் ஒரு அற்புதமான வீரர். சச்சின் டெண்டுல்கரைப் போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த டெஸ்ட் வீரராக உருவாகக்கூடிய திறன் அவரிடம் உள்ளது” என ராஜீவ் சுக்லா சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சோனல் தினுஷ தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.காலியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 100 மற்றும் 84 ஓட்டங்களைப் பெற்ற அவர், கொழும்பில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 103 ஓட்டங்களைப் பதிவு செய்தார்.தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைச்சதம் பதிவு செய்த சோனல் தினுஷ, இலங்கை அணியின் பின்வரிசை வீரர்களுடன் இணைந்து இந்திய அணிக்கு எதிராக போராடி வருகிறார்.இதன் மூலம், இந்தியாவுக்கு எதிரான தொடரில் தொடர்ந்து நான்கு இன்னிங்ஸ்களில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை அவர் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
சுத்தமாக்கப்பட்ட சிவனொளிபாதமலை : சியபத பினான்ஸின் பசுமை முன்னெடுப்பு திட்டம்

சுத்தமாக்கப்பட்ட சிவனொளிபாதமலை : சியபத பினான்ஸின் பசுமை முன்னெடுப்பு திட்டம்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, தனது 21ஆவது ஆண்டு நிறைவு மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த '2026 சிவனொளிபாதமலை சுத்திகரிப்பு திட்டம்' வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. கடந்த ஜூன் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. சியபத பினான்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மதிஷ ஹேவவித்தாரண மற்றும் சிரேஷ்ட நிர்வாகக் குழுவின் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்தத் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். இதன்போது ஒரே நாளில் சுமார் ஒரு டொன் அளவிலான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது. அத்துடன் புனித ஸ்தலத்தைப் பாதுகாப்பதற்கான கழிவு முகாமைத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான சிவனொளிபாதமலை சரணாலயம், நாட்டின் அபூர்வ தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் களனி, களு, வளவை ஆகிய முக்கிய ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளைக் கொண்டுள்ள சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். அதிகரித்து வரும் யாத்ரீகர்களின் வருகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைப்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும். சிவனொளிபாதமலை முதன்மை தலைமைத் துறவி பெங்கமுவே தம்மதின்ன தேரரின் வழிகாட்டுதலின் கீழ், மஸ்கெலிய பிரதேச சபை, வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் நல்லதண்ணி காவல்துறை ஆகியவற்றின் முழுமையான ஆதரவுடன் இந்த கூட்டுப் பாதுகாப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

விபரங்களுக்கு
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

இலங்கையின் முதன்மைத் தொலைத்தொடர்புச் சேவை வழங்கியும் விளையாட்டுத்துறையின் பிரதான அனுசரணையாளருமான Dialog Axiata PLC நிறுவனம், இந்தமுறை பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்குப் பெருமை சேர்த்த வீரர்களைச் சிறப்பாகக் கெளரவித்துள்ளது.இதற்கமைய, நேற்று (05) இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டு வீரர்களுக்கான மக்கள் வரவேற்பு வீதிப் பேரணியின் போது, Dialog Axiata PLC நிறுவனத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் இந்த கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.பொதுநலவாய விளையாட்டு வரலாற்றில் தடகளப் பிரிவில் இலங்கைக்காக முதன்முறையாகத் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாலித பண்டார ஆகியோருக்கு, Dialog Axiata PLC நிறுவனத்தின் குழுமத் தலைமைச் செயல் அதிகாரி சுபுன் வீரசிங்கவினால் சிறப்புப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.2028 லொஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டி வரை இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பு பங்காளியாகச் செயற்படும் டயலொக் நிறுவனம், நாட்டின் முதன்மை ஒலிம்பிக் எதிர்பார்ப்பான ருமேஷ் தரங்க உள்ளிட்ட திறமையாளர்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுத்துறையின் முதன்மை அனுசரணையாளராகப் பாலித பண்டார உள்ளிட்ட விளையாட்டு வீரர்களையும் தொடர்ந்து பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

விபரங்களுக்கு
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக நிறுவனத்தின் பரந்த விரிவாக்கல் முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக வெற்றிகரமாக சமீபத்தில் தனது 61வது கிளையை நிக்கவெரட்டியவில் திறந்து வைத்துள்ளது.புதிய கிளையை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன திறந்து வைத்தார். தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்ட) மதிஷ ஹேவாவிதாரண, சிரேஷ்ட நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரி ஹரிசன் சோமசிறி, கிராம சேவையாளர் எச்.எம்.டி. நாமல் பண்டார ஆகியோர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் இந்த கிளை திறந்து வைக்கப்பட்டது.வளமான மண் மற்றும் பயிர் செய்கைக்கு ஏற்ற அமைவான நிலங்களைக் கொண்ட நிக்கவரெட்டி, அதன் விவசாய பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்காக புகழ் பெற்றுள்ளது, அங்குள்ள சமூகம் இன்றுவரை தனித்துவமான விவசாய நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்.பாரம்பரியமாகவும் வரலாற்று ரீதியாகவும் விவசாயத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், நிக்கவரெட்டி அதன் பொருளாதார அடித்தளத்தை பாரம்பரியமற்ற தொழில்துறைகளிலும் பன்முகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் சேவைத் துறைஇ விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தசாப்தங்களாக, நிக்கவெரட்டிய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் முதலீடுகளுக்கான மேம்பட்ட காலநிலை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பிராந்தியத்தின் நிலைப்பாடு - நவீன வீட்டுவசதி திட்டங்களின் அதிகரிப்புக்கும் வணிக வளாகங்களின் கிடைக்கும் தன்மைக்கும் வழி வகுத்துள்ளது.சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் "சியபத பினான்ஸ் எங்களுக்கு மிக உயர்ந்த திருப்தி அளிக்கும் அம்சம் என்னவெனில், நாங்கள் சென்றடையும் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சேவைகள் ஏற்படுத்தும் நல்விளைவுகளை காண்பதாகும்," எனவும் மேலும் கூறுகையில் "நிக்கவெரட்டிய கிளை திறப்பு நெருங்கும் போது, ​​உள்;ர் சமூகம் புதிய வழிகளுக்கு திறந்திருப்பதையும் நாங்கள் அவதானித்தோம். உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளில் இளைஞர்கள் வளர்ந்து வருவதையும், கைத்தறி கைவினைகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத் தொழிலும் படிப்படியாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்தோம். இத்தகைய பின்னணியில், இந்த சமூகம் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதற்கு எங்கள் ஆதரவு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் "ஸ்மார்ட் பே" - அதன் பில் செலுத்தும் வசதி வரை விரிவான தயாரிப்பு தொகுதியினை பெருமைப்படுத்துகிறோம், புதிய கிளை, தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த நிதி தீர்மானங்களை ஊக்குவிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, ஒரு சிறிய திறப்பு விழா நடத்தப்பட்டது, மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் காலுறைகள் கொள்வனவு செய்வதற்கு பரிசு வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணம் ஒதுக்கப்பட்டது.பரிசு வவுச்சர்களை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் திரு. மதிஷ ஹேவாவிதாரண ஆகியோர், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிக்கவெரட்டிய கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன், திறப்பு விழாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கினர்.சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள் மூலம் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.037 4658105 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 48 E, ஹீலோகம, நிக்கவெட்டிய என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன் மூலமோ நிக்கவெட்டிய கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

விபரங்களுக்கு
வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

சியபத பினான்ஸ், மன்னாரில் புதிய கிளையுடன் வடக்கில் தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது    20 வருட அனுபவமுள்ள முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது 58ஆவது கிளையை மன்னார் நகரில் திறந்து வைத்தது.    இது வட மாகாணத்தில் தனது வலையமைப்பை வலுப்படுத்தி, நாடு தழுவிய கிளை வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.    மன்னார் கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, தலைமை செயற்பாட்டு அதிகாரி மதிஷ ஹேவாரத்ன மற்றும் சிரேஷ்ட நிர்வாகம், கிராம சேவையாளர் என்டனி மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம், தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கண்கவர் அழகினை பாதுகாத்து வரும் மன்னார் மாவட்டம், பிரதான நிலப்பகுதி மற்றும் மன்னார் தீவை கொண்டுள்ளது.    15-64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான வயதுக் குழுவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், நீண்டகாலத்தில் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வான மற்றும் வசதியான நிதி தீர்வுகளுக்கான கட்டாய தேவை ஒன்றினை கொண்டுள்ளதாக சியபத பினான்ஸ் அடையாளம் காட்டுகிறது.    மன்னார் நகரம் , பசுமையான காடுகள், பனை மரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை முதல் தரிசு நிலம் மற்றும் தடாகங்கள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட வறண்ட, மணல் தீபகற்பமாகும். தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க 53 சதவீதத்தை கொண்ட விவசாயத் துறை, பிராந்தியத்தின் பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது அங்கு பெரும்பாலான உள்ளூர்வாசிகள் நெல் விளைச்சலை தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக கொண்டுள்ளனர்.    மன்னாரில் உள்ள பல மீன்பிடி கிராமங்களின் வாழ்வாதாரத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.    நிகழ்வில் உரையாற்றிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, 'துடிப்பான மன்னார் நகரில் எங்கள் புதிய கிளையை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ஏராளமான வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் கொண்ட ஒரு பிராந்தியம்.    எங்கள் சேவைகள் மூலம், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதையும், உலகின் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவுவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இதை கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைந்து, பல்வேறு தனிநபர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் எங்கள் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.' எனக் கூறினார்.    சமீபத்திய ஆண்டுகளில், மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற வளங்களால் இயக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான பரந்த ஆற்றலைக் காட்டியுள்ளது, இது உள்ளூர் பொருளாதாரங்களுக்கு புதிய வழிகளை வழங்குகிறது. பிராந்தியத்தில் உள்ள உயர்ந்த இலட்சியம் உள்ள தனிநபர்களுக்கும் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நம்பகமான நிதி ஆலோசகராக கவர்ச்சிகரமானதாக இருக்கும் இந்த புதிய கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு அதன் கொடுப்பனவு செலுத்தும் வசதியான ஸ்மார்ட் பே வரை பரந்த தயாரிப்பு தொகுப்பினை வழங்குகிறது.    நிறுவனத்தின் 'சியபதேன் மிஹின்கதட்ட' சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திற்கு இணங்க, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் சென்.லூசியா மகா வித்தியாலயத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் முயற்சியை மேற்கொண்டனர் மற்றும் மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக கணினிகள் மற்றும் துணைக்கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் மற்றும் GWM ஆகியவை இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குகின்றன.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய வாகனத் துறையில் முதன்மை வகிக்கும்  GWM உடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாண்மையை அறிவித்துள்ளது.    இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய ஆற்றல் வாகனங்களின் (NEVs) புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்துவது இந்தக் கூட்டாண்மையின் நோக்கமாகும்.     அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு, அக்டோபர் 30 அன்று டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (DPA) தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டேவிட் பீரிஸ் குழுமத்தின் மூத்த உறுப்பினர்களான குழுமத் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் ரோஹன திஸாநாயக்க மற்றும் டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மகேஷ் மற்றும் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் யசந்த அபேகோன், ஆகியோர் கலந்து கொண்டனர். GWM நிறுவனத்தின் பிரதிநிதிகள் இணைய வழியில் நிகழ்வில் இணைந்துகொண்டனர்.    இந்தக் கூட்டாண்மை, புத்தாக்கம், நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் மூலம் நாட்டின் போக்குவரத்துத் துறையின் நிலப்பரப்பை மறுவடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டது. உலகளாவிய முன்னணி நிறுவனம், தேசத்தின் முன்னணி நிறுவனத்துடன் இணைகிறது.    இந்தப் புதிய கூட்டாண்மை, உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் GWM-இன் உலகளாவிய பொறியியல் சிறப்பையும், நான்கு தசாப்தங்களுக்கும் மேலான டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA)-இன் நம்பகத்தன்மை மற்றும் எளிமையான அணுகல் கொண்ட பாரம்பரியத்தையும் ஒருங்கிணைக்கிறது.      இந்த ஒத்துழைப்பின் மூலம் இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்கள்  இனிமேல் நவீன தொழில்நுட்பம் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மைகொண்ட ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் முழு மின்சார வாகனங்களை பெற்றுக்கொள்ள முடியும்.  அவுஸ்திரேலியாவில் ஹவல் H6 ரக வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 5-நட்சத்திர ANCAP பாதுகாப்புத் தரச் சான்றிதழின் உறுதியுடனும், உலகின் சவாலான சந்தைகளில் கிடைத்த அனுபவத்துடனும், GWM நிறுவனம் இலங்கைச் சாலைகளுக்குச் சிறந்த செயல்திறனையும், மன அமைதியையும் கொண்டு வருகிறது.    "Go With More" என்ற GWM-இன் உலகளாவிய பிராண்ட் தத்துவத்தின் கீழ் இந்த முயற்சி, இலங்கையில் உள்ள ஓட்டுனர்களுக்கு செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன் ஆகிய இரண்டிற்கும் இடையே தேர்வு செய்ய வேண்டிய நிலையை நீக்கியுள்ளதுடன் புத்திசாலித்தனமான, ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் அதிக நம்பிக்கையான எதிர்காலத்திற்கு அழைப்பு விடுக்கிறது.     GWM ஹைப்ரிட் ரக வாகனங்களின் அறிமுகம் டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA) மற்றும் GWM ஆகிய நிறுவனங்களின் கூட்டாண்மையின் கீழ் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் வாகனங்கள்:     1. ஹவல் H6 HEV / PHEV- ரூ. 17.995 மில்லியன் (HEV)/ரூ. 20.995 மில்லியன்(PHEV)    அதிநவீன மற்றும் புத்திசாலித்தனமான SUV: நகர்ப்புற சொகுசையும், ஹைப்ரிட் வாகனத்தின் பன்முகத்தன்மையையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.சக்தி வாய்ந்த, அதேநேரம் எரிபொருள் சிக்கனமான ஓட்டத்தை வழங்குகிறது. இதில், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 12.3 அங்குல அல்ட்ரா-ஸ்மார்ட் தொடுதிரை ஆகியவை கூடுதல் அம்சங்கள்.இது குறிப்பிடத்தக்க தூய மின்சாரப் பயண வரம்பை வழங்குகிறது. இதன்மூலம், உண்மையான ஹைப்ரிட் சுதந்திரத்தையும் தினசரி பயணங்களுக்கு மிகவும் குறைவான எரிபொருள் செலவையும் பெறலாம்.    2. ஹவல் GT பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV)-ரூ. 24.995 மில்லியன்    இது ஒரு செயல்திறன் மிக்க பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி ஆகும். இதன் தோற்றம், தைரியமான வடிவமைப்பு மற்றும் துடிப்பான ஹைப்ரிட் சக்தி ஆகிய அம்சங்கள் தனித்துவமானவை. இது ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கு நிகரான வேகத்தை வழங்குகிறது. அதாவது, வெறும் 4.9 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ/மணி வேகத்தை எட்டும். அத்துடன், பிரம்மாண்டமான 762 Nm முறுக்குவிசை (torque) திறனையும் கொண்டுள்ளது. இதன் விளையாட்டுத்தனமான வெளிப்புற வடிவமைப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஓட்டுநரை மையப்படுத்தி உட்புரமும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 'Alcantara-style' பாணியிலான ஸ்போர்ட் இருக்கைகள் மற்றும் ஆக்ரோஷமான வெளிப்புற வடிவமைப்பு ஆகியவை அடங்கும்.     3.டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் (HEV)-ரூ. 35.995 மில்லியன்    நகரத்தைத் தாண்டி சுதந்திரத்தை நாடும் சாகச விரும்பிகளுக்காக உருவாக்கப்பட்ட, உறுதியான ஆஃப்-ரோட் வாகனம் இது. டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV) அதன் முழு 4x4 ஆஃப்-ரோட் சேசிஸ், முன் மற்றும் பின் டிஃபரன்சியல் லாக்குகள் மற்றும் Crawl Control வசதி ஆகியவற்றின் மூலம் நவீன தேடல் அனுபவத்தை மறுவடிவமைக்கிறது. இதன் ராணுவத் தர வலிமை, இரட்டை 12.3-இன்ச் திரைகள் மற்றும் உயர்தர faux Nappa leather accents உட்புற அலங்காரம் போன்ற சொகுசான அம்சங்களால் சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது.   4. டேங்க் 500 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV)- ரூ. 43.5 மில்லியன்    GWM-இன் முதன்மை ரக வாகனமான இந்த வாகனம் கம்பீரமான வடிவமைப்பு, ஏழு இருக்கைகள் கொண்ட வசதி மற்றும் ஹைப்ரிட்இன் சொகுசுத்தன்மை  ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. 'Nappa Leather-Accented' இருக்கைகள் (குளிரூட்டும்/மசாஜ் வசதியுடன்) மற்றும் பிரமாண்டமான 14.6-அங்குல மைய மல்டிமீடியா திரையுடன் இதன் உள்ளறை ஆடம்பரமாக அமைக்கப்பட்டுள்ளது. பாடி-ஆன்-ஃப்ரேம் சேசிஸ் (Body-on-Frame chassis: வாகனத்தின் உடல், அதன் சட்டகத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கும்) அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நிகரற்ற கம்பீரமான தோற்றத்தையும், உண்மையான ஆஃப்-ரோட் திறனையும் வழங்குகிறது. இது ஒவ்வொரு வருகையையும் ஒரு சிறப்பு நிகழ்வாக மாற்றுகிறது.    மேலதிகமாக, நிலைத்தன்மை மற்றும் அதிக செயல்திறன் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை நாடும் இலங்கை நுகர்வோருக்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், DPA நிறுவனம் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் ORA ரக வாகனங்களையும் அறிமுகப்படுத்த உள்ளது.    புத்தாக்கம் மூலம் இலங்கையின் எதிர்கால போக்குவரத்து துறையை மறுவடிவமைத்தல். புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் வாகன துறையின்  எதிர்காலத்திற்கான ஒரு மூலோபாய நகர்வாக இந்தக் கூட்டாண்மை அமைகிறது.    GWM-இன் நவீன ஹைப்ரிட் மற்றும் மின்சார தொழில்நுட்பங்கள், DPA-இன் வலுவான நாடு தழுவிய சேவை வலையமைப்புடன் இணைந்து இலங்கை மக்களுக்கு அதிக சுதந்திரத்தையும், சிறந்த செயல்திறனையும், சிறந்த மதிப்பையும், அதிக நம்பிக்கையையும் வழங்குகின்றன.    நிகழ்வில் உரையாற்றிய DPA-இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. மகேஷ், மேலும் கூறியதாவது: "GWM-இன் வாகனங்கள் உலகத் தரம், நம்பிக்கை மற்றும் புதுமையின் அடையாளமாகத் திகழ்கின்றன. டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸின் நம்பகத்தன்மை மற்றும் இணையற்ற சேவையுடன் ஹைப்ரிட் செயல்திறனை அனுபவிக்கும் சுதந்திரத்தை இலங்கை மக்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.   " GWM x DPA - GO WITH MORE. GWM மற்றும் DPA-வின் இந்தக் கூட்டாண்மை, வெறும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதைவிட மேலானதாகும். இது செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் ஒரு புத்திசாலித்தனமான அதிகாரத்தை போக்குவரத்து துறையில்  தொடங்கி வைக்கிறது.    GWM-இன் உலகத் தரப் புதுமை மற்றும் DPA-இன் உள்ளூர் அனுபவம் ஆகியவை கைகோர்ப்பதால், ஒவ்வொரு GWM வாகன உரிமையாளருக்கும் DPA-வின் நான்கு தசாப்த கால நாடு தழுவிய சேவை, முழுமையான உத்தரவாதம் மற்றும் தடையற்ற உதிரிப்பாக விநியோகம் ஆகியவற்றினை பெறமுடியும். இலங்கை மக்களுக்கு இது ஒரு புதிய ஓட்டுநர் அனுபவத்தைத் தொடக்கி  வைக்கிறது.    இந்த அனுபவத்தில், தொழில்நுட்பம் உங்கள் உணர்வுகளுக்கு உற்சாகமளிக்கிறது, விரிவான தேர்வு உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது, மற்றும் எதிர்வரும் பாதை அதிக சுதந்திரத்திற்கும் , உறுதியான நம்பிக்கைக்கும்  உத்தரவாதம் அளிக்கிறது.  

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More
தொடரும் வெற்றி அலை : மமிதா பைஜூவுக்கு ஹட்ரிக் சாதனை – ஒரே ஆண்டில் மூன்று ரூ.100 கோடி வசூல் படங்கள்

தொடரும் வெற்றி அலை : மமிதா பைஜூவுக்கு ஹட்ரிக் சாதனை – ஒரே ஆண்டில் மூன்று ரூ.100 கோடி வசூல் படங்கள்

இந்த ஆண்டில் நடிகை மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘ஜனநாயகன்’ மற்றும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஆகிய இரு திரைப்படங்களும் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளன. இந்நிலையில், அண்மையில் வெளியான மலையாளத் திரைப்படமான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படமும் ரூ.100 கோடி வசூல் இலக்கை கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரே ஆண்டில் மமிதா பைஜூ நடிப்பில் வெளியான மூன்று திரைப்படங்கள் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து, ஒரே ஆண்டில் மூன்று ரூ.100 கோடி வசூல் திரைப்படங்களில் இடம்பெற்ற நடிகை என்ற ஹட்ரிக் சாதனையை மமிதா பைஜூ படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விபரங்களுக்கு

"அந்தக் காட்சி எனக்கு ரொம்ப ஆறுதலாக இருந்தது" : விஜய் குறித்து பகிரங்கமாகப் பேசிய நடிகை விஜயலட்சுமி!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பாக நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள காணொளி தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அதில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்த்ததாகத் தெரிவித்துள்ள விஜயலட்சுமி, விஜய்யின் நடிப்பு வழக்கம்போல சிறப்பாக இருந்ததாக பாராட்டு தெரிவித்துள்ளார். குறிப்பாக, திரைப்படத்தில் விஜய் தனது குழந்தையிடம் “தைரியமா இரு விஜிமா” எனக் கூறும் காட்சி தனக்கு ஆறுதல் அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், திரைப்படத்தில் பெண்களுக்கு ஆதரவாக இடம்பெற்றுள்ள கருத்துகள் மற்றும் காட்சிகளையும் விஜயலட்சுமி வெகுவாக பாராட்டியுள்ளார். இதனிடையே, ‘பிரண்ட்ஸ்’ திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தபோது இடம்பெற்ற சுவாரஸ்யமான சம்பவங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். இருவரின் பெயரும் ‘விஜி’ என்பதால் படப்பிடிப்புத் தளத்தில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். அத்துடன், அரசியல் பயணத்தை முன்னெடுத்து வரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ள விஜயலட்சுமி, வாய்ப்பு கிடைத்தால் அவரது கட்சியில் இணைவதற்கும் தயாராக இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி : காணொளியை வெளியிட்டு ரசிகர்களை எச்சரித்த நடிகை சமந்தா!

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி : காணொளியை வெளியிட்டு ரசிகர்களை எச்சரித்த நடிகை சமந்தா!

கர்ப்ப காலத்திலும் மருத்துவரின் ஆலோசனையுடன் உடற்பயிற்சி மேற்கொண்டு வரும் நடிகை சமந்தா, அது தொடர்பான காணொளியொன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த காணொளியில், கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வது தொடர்பான தனது அனுபவத்தை அவர் பகிர்ந்துள்ளார். அதேவேளை, தான் மேற்கொள்ளும் பயிற்சிகளை மற்றவர்கள் அப்படியே பின்பற்ற வேண்டாம் எனவும் அவர் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள விரும்புவோர், தங்களது மருத்துவர் மற்றும் தகுதியான பயிற்சியாளரின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே அவற்றை மேற்கொள்ள வேண்டும் என சமந்தா வலியுறுத்தியுள்ளார்.

விபரங்களுக்கு
காதலைச் சொல்ல இப்படியொரு பிரம்மாண்டமா? - இணையத்தை அதிரவிட்ட யூடியூபர்!

காதலைச் சொல்ல இப்படியொரு பிரம்மாண்டமா? - இணையத்தை அதிரவிட்ட யூடியூபர்!

கன்னடத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர் பிரம்மாண்டமான பூங்கொத்தை உருவாக்கி தனது காதலிக்கு மிக வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.அவரது இந்த பிரம்மாண்டமான காதல் வெளிப்படுத்தல் நிகழ்வு தற்போது இணையத்தில் வைரலாகி, பலரையும் வியப்பில் ஆழ்த்தி பேசுபொருளாகியுள்ளது.இந்தச் சிறப்புமிக்க தருணத்திற்காக 40,000 முதல் 45,000 வரை புதிய மலர்களைக் கொண்டு இராட்சத அளவில் இந்த பிரம்மாண்ட பூங்கொத்து தயாரிக்கப்பட்டுள்ளது.ஒரு மலரின் சராசரி விலை ரூ.20 என கணக்கிடப்பட்டால், இந்த பிரம்மாண்ட பூங்கொத்து தயாரிப்பதற்கான மலர்களின் செலவு மட்டும் சுமார் ரூ.9 இலட்சத்தை (இந்திய ரூபாவில்) எட்டும் என்று இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.இருப்பினும், போக்குவரத்து மற்றும் தொழிலாளர் செலவுகளைப் பொறுத்து இதன் இறுதி மதிப்பு மாறுபடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காதலை வெளிப்படுத்த இது ஒரு அதிநவீன மற்றும் பிரம்மாண்டமான வழியா அல்லது சமூக வலைதள விளம்பர உத்தியா என இணையவாசிகள் மத்தியில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த வித்தியாசமான முயற்சி பலரையும் ஆச்சரியத்திலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

விபரங்களுக்கு

"ஹிந்தி சுத்தமா தெரியாது.. ஆனால் ஈழத் தமிழ் பேசுவேன்" : முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் வெளிப்படையாகப் பேசிய விஷயம்!

இயக்குநர் ஜேசன் சஞ்சய் தனக்குத் தெரிந்த மொழிகள் குறித்து சமீபத்திய பேட்டியொன்றில் கருத்துத் தெரிவித்துள்ளார். தனக்கு ஆங்கிலம் தெரியும் என்றும், தமிழையும் பேசுவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது தாயார் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால், ஈழத் தமிழும் தனக்குப் பேசத் தெரியும் என அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, தனக்கு ஹிந்தி மொழி சுத்தமாகத் தெரியாது என்றும், தெலுங்கு மொழியில் ஓரளவு மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். எனினும், ஒட்டுமொத்தமாக தனக்குத் தெரிந்த மொழிகள் இரண்டு மட்டுமே என இயக்குநர் ஜேசன் சஞ்சய் தெளிவுபடுத்தியுள்ளார்.

விபரங்களுக்கு
ஹரி போட்டர் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சி - 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையில்!

ஹரி போட்டர் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சி - 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையில்!

ஹரி போட்டர் திரைப்படங்களில் 'ரோன் வீஸ்லி' கதாபாத்திரத்தில் நடித்து உலகப் புகழ்பெற்ற நடிகர் ரூபர்ட் கிரிண்ட் , அதே கதாபாத்திரத்தில் ஒரு முதிர்ந்த வயதுக் கதாபாத்திரமாக நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஸ்பின்-ஓஃப் நாடகத்தில் நடிக்கவுள்ளார்.தனது 11வது வயதில் ஹரி போட்டர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த 38 வயதான ரூபர்ட் கிரிண்ட், வரும் பெப்ரவரி முதல் நான்கு மாதங்களுக்கு 'ஹரி போட்டர் அண்ட் தி கர்ஸ்ட் சைல்ட்' (Harry Potter and the Cursed Child) என்ற பிராட்வே நாடகக் குழுவில் இணையவுள்ளார்.மூலப் புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களின் முடிவிலிருந்து 19 ஆண்டுகள் கழித்து, ஹரி, ரோன் மற்றும் ஹெர்மைனி ஆகியோர் முதிர்ந்தவர்களாகப் பேசப்படும் கதையாக இது அமைந்துள்ளது. இதில் ரோனும் ஹெர்மைனியும் திருமணம் செய்து கொண்டு தங்களது மகளை ஹோக்வார்ட்ஸுக்கு அனுப்புவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.இந்தநிலையில் ஹரி போட்டர் திரைப்படத்தில் நடித்த பிரதான மூவரில் (ஹரி, ரோன், ஹெர்மைனி) தனது கதாபாத்திரத்திற்கு மீண்டும் திரும்பும் ஒரே நடிகர் ரூபர்ட் கிரிண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு

"உங்களிடம் நடிப்பைக் கற்றுக்கொள்ள வேண்டும் - சிறுமி நக்ஷத்ராவின் நடிப்பை வியந்து பாராட்டிய நடிகர் தனுஷ்!

‘இருமுடி’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நக்ஷத்ராவின் நடிப்புக்கு நடிகர் தனுஷ் பாராட்டு தெரிவித்துள்ளார். திரைப்படத்தைப் பார்த்த தனுஷ், நக்ஷத்ராவுடன் காணொளி அழைப்பில் பேசியுள்ளார். அப்போது, “ஒருநாள் உன்னிடம் நடிப்பு கற்றுக்கொள்ள வேண்டும். மிகவும் அருமையாக நடித்திருக்கிறாய். உன்னுடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது” எனப் பாராட்டியுள்ளார்.மேலும், “ஒரு நாள் நாம் சந்திப்போம். சிறப்பாக செய்கிறாய். கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்” எனக் கூறி அவரை ஊக்கப்படுத்தியுள்ளார்.இதுதொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.சிவா நிர்வாணா இயக்கியுள்ள ‘இருமுடி’ படத்தில் ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். குறித்த திரைப்படத்தின் வசூல் ரூ.80 கோடியை கடந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

விபரங்களுக்கு
சமூக வலைத்தள சர்ச்சைகள் : நடிகை தர்ஷா குப்தா மீது வழக்கு பதிவு

சமூக வலைத்தள சர்ச்சைகள் : நடிகை தர்ஷா குப்தா மீது வழக்கு பதிவு

சமூக வலைத்தளங்களில் இளம் வயதினரைப் பாதிக்கும் வகையில் தவறான கருத்துகள் மற்றும் பதிவுகளை வெளியிட்டதாகக் கூறப்படும் திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்ட 12 பேர் மீது சேலம் மாநகர சைபர் குற்றவியல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சேலம் பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சிலர் 18 வயதுக்குட்பட்டவர்களைப் பாதிக்கக்கூடிய வகையில் தவறான கருத்துகள் மற்றும் உள்ளடக்கங்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.குறிப்பாக, திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்ட 12 பெண்கள் சமூக வலைத்தளங்களில் நேரலை மற்றும் பதிவுகள் மூலம் தவறான எண்ணங்களைத் தூண்டும் வகையில் பேசுவதாகவும், இதுபோன்ற உள்ளடக்கங்கள் இளைஞர்களைப் பாதிக்கும் வாய்ப்புள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இதுபோன்ற உள்ளடக்கங்களை வெளியிடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டத்தரணி அஜித் கோரிக்கை விடுத்துள்ளார்.இதையடுத்து, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், சமூக வலைத்தளங்களில் தவறான உள்ளடக்கங்களை வெளியிட்டதாகக் கூறப்படும் திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த வழக்குத் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் காவல்துறையினர், சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////