ஜனாதிபதி செயலகத்தில் நாளாந்தம் இடம்பெறும் கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்புகளில் கலந்து கொள்பவர்களுக்கு அருந்துவதற்காக பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்கள் வழங்கும் செயற்பாட்டை முற்றாக நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
இதற்கமைய கண்ணாடி குவளைகளில் நீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நாளாந்தம் இடம்பெறும் கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்புகளில் கலந்துகொள்பவர்களின் பாவனைக்காக பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களை வழங்குதல் நீண்டகாலமாகவே இடம்பெற்றுவரும் வழக்கமாகும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த புதிய தீர்மானத்திற்கமைய இதுவரை காலமும் ஜனாதிபதி செயலகத்தில் நாளாந்தம் உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்கள் சுற்றாடலில் ஒன்றுசேர்வது பெருமளவு குறைவடையும்.
ஏனைய அரச நிறுவனங்களும் இந்த நடைமுறையை வெகுவிரைவில் பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நம்புவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
Latest News
ரஷ்ய ஒலிம்பிக் குழு மீதான தனது தடை நீக்கப்பட்டுள்ளது.
Local
08 July 2026
கால்பந்து கிண்ணத் தொடரின்: பெல்ஜியத்திடம் தோற்ற அமெரிக்காவைக் கிண்டல் செய்த ஈரான் கால்பந்து அணி!
Local
08 July 2026
கால்பந்து செம்பியன்சிப் வரலாற்றில் பெறப்பட்ட 3000 ஆவது கோல்!
Local
08 July 2026
நீர்கொழும்பு சிறை மோதல்: 4 நாட்களுக்கு முன்பே உளவுத்துறை தகவல் கிடைத்தும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை – நாடாளுமன்றத்தில் ஹர்ஷன ராஜகருண குற்றச்சாட்டு
Local
08 July 2026
இயற்கையைப் பாதுகாக்க நதியைத் திருமணம் செய்துகொண்ட இளம்பெண்!
Local
08 July 2026
இணையவழி மோசடிகள் குறித்து இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை
Local
08 July 2026
சுற்று 16 இல் எகிப்தை தோற்கடித்த ஆர்ஜன்டீனா
Local
08 July 2026
கிரீன்லாந்து அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வர வேண்டும்: நேட்டோ மாநாட்டுக்கு சென்றுள்ள ட்ரம்ப் வலியுறுத்தல்!
Local
07 July 2026
ஹோர்மூஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம்: வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்
Local
07 July 2026
"அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தாமல் இருந்திருந்தால் பெரும் விபரீதம் ஏற்பட்டிருக்கும்"
Local
07 July 2026