Sports04 May 2013

இந்திய அணி அறிவிப்பு

எதிர்வரும் ஆறாம் திகதி ஆரம்பமாகவுள்ள செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் போட்டி தொடருக்கான  இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

15 பேர் கொண்ட இந்த குழுவில், கௌதம் கம்பீர், யுவராஜ் சிங், செட்டிஸ்வர் புஜாரா, அஜன்கியா ரஹனே, அசோக் டின்டா, சமி அஹமட் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த போட்டிகளுக்காக சிக்கர் தவான், தினேஷ் கார்திக், முரளி விஜய், இர்பான் பதான், உமேஷ் யாதவ், வினய் குமார் ஆகியோர் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்த அணியில், சிக்கர் தவான், விராட் கோஹலி, சுரேஷ் ரைனா, தினேஷ் கார்திக், முரளி விஜய், ரோஹித் சர்மா, ரவிந்திர ஜடேஜா, ரவிசந்திரன் அஸ்வின், இர்பான் பதான், உமேஷ் யாதவ், புவ்னேஸ்வர் குமார், இசாந் சர்மா, அமித் மிஸ்ரா மற்றும் வினய் குமார் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes