International09 May 2013

மீனவர்கள் மறியல் போராட்டம்



அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்ற 30 மீனவர்கள் நேற்று ராமேஸ்வரம் சென்றடைந்தனர். 

குறித்த மீனவர்களின் உறவினர்கள் அவர்களை ராமேஸ்வரம் இறங்குதுறையில் சென்று வரவேற்றுள்ளனர்.

தனுஷ்கோடி - தலைமன்னார் கடலில் கடந்தமாதம் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்டனர்.

4 முறை மீனவர்களுக்கு சிறைக்காவல் நீட்டிக்கப்பட்டது. 

அவர்களை விடுவிக்க ராமேஸ்வரத்தில் போராட்டங்கள் இடம்பெற்றன.

இந்திய மத்திய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசாங்கம் மன்னார் நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டது.

இந்த நிலையில் நேற்று இடம்பெற்ற நீதிமன்ற விசாரணைகளை அடுத்து 30 பேரையும், 5 படகுகளையும் விடுவித்து மன்னார் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார். 

இதனிடையே, ஏற்கனவே கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்ளை விடுவிக்க வலியுறுத்தி இன்று தொடரூந்து மறியல் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் விடுவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் கைதாவதற்கு முன்தினம் சிறைப்பிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 26 பேர் மீது சட்டநடவடிக்கை இடம்பெறவில்லை.

அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி காரைக்கால் பகுதி மீனவர்கள் கடந்த 7-ம் திகதி முதல் தொடர் பணிநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes