International14 May 2013

இந்திய பிரதமர் ஜப்பான் செல்கின்றார்.


இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ஜப்பானுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் 27ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமாக அவர் பயணமாகவுள்ளார்.

27ஆம் திகதி டோக்கியோ செல்லும் அவர் 30ஆம் திகதி வரையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் இருநாடுகளுக்கும் இடையிலான அணுஆயுத ஒப்பந்த உடன்படிக்கையில் கையெழுத்திட உள்ளார்.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரையும் பிரதமர் மன்மோகன் சிங் சந்திக்க உள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes