Sports15 May 2013

இந்திய கிரிக்கெட் வாரியம் குற்றச்சாட்டு

 
சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலிருந்து விலகப் போவதாக சர்வதேச கிரிக்கெட் வாரியத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் எச்சரித்துள்ளதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தில் விளையாட்டு வீரர்களுக்கான பிரதிநிதி தேர்வில் சிவராம னிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். 

ஆனால் சிவராம கிருஷ்ணனை இந்திய கிரிக்கெட் வாரியம் தனது செல்வாக்கை பயன்படுத்தி வெற்றி பெற செய்ததாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்க தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் தேர்வு குறித்து விசாரணை செய்தால் இங்கிலாந்தில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலிந்து விலகப் போவதாக சர்வதேச கிரிக்கெட் வாரியத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes