International15 May 2013

சிரிய எறிகணை தாக்குதல்

 


சிரிய இஸ்ரேல் எல்லை பிராந்தியத்தில்  இஸ்ரேல் குடியேறியுள்ள மௌன்ட் ஏமன் பிரதேசத்தில் பல சிரிய எறிகணை தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் இடம் பெறும் உள்நாட்டு மோதல் காரணமாகவே இந்த எறிகணை தாக்குதல்கள் இஸ்ரேலிய குடியேற்ற பிரதேசத்தையும் சென்றடைந்துள்ளது.

இந்தநிலையில் வெளியாட்கள் மௌன்டன் பிரதேசத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஐக்கிய நாடுகளின் படைகளுடன் தாம் தொடர்பில் உள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மௌன்ட் ஏமன் பிரதேசம் அந்த பிராந்தியத்தில் மிக உயரத்தில் உள்ளது.

வருடாந்தரம் ஏராளமான  வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பனிச்சறுக்கு உட்பட பல விளையாட்டுக்களில் கலந்து கொள்வதற்கு அங்கு செல்வது வழக்கம்.

அந்த பிராந்தியம் முன்னர் சிரியாவிற்கு சொந்தமான பிரதேசமாக இருந்தது.

எப்படியிருப்பினும்இ இஸ்ரேல் 1967 ஆம் ஆண்டு அந்த பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.

கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையணியைச் சேர்ந்த 22 பேர் சிரியாவில் போராளிகளினால் நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அதனையடுத்து  கோலன்ட் ஹையிட்த் பிரதேசத்தில் நிலைக் கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி படையிருடனான உறவினை கைச்சாத்தான ஒப்பந்தத்திற்கு அமைய பேணும்படி முன்னர் ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடதக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes