General17 May 2013

ஐ.நா சபை பிரதிநிதி இலங்கை விஜயம்?

 

ஐக்கிய நாடுகள் சபையின் சட்டவிரோத படுகொலைகள், சட்டவிரோத தண்டனைகள் தொடர்பான விசேட பிரதிநிதி கிறிஸ்டோப் ஹென்ஸ் இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புவதாக அறிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 23வது அமர் எதிர்வரும் வாரத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையிலலேயே, அவர் இலங்கை வர விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை விஜயம் செய்ய விரும்புவதாக தாம் ஏற்கனவே விடுத்திருந்த கோரிக்கைக்கு இதுவரையில் பதில் எதுவும் கிடைக்கப்பெற வில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“செனல் 4” ஊடகத்தின் ஒரு காணொளி உண்மையானது என 2011ஆம் ஆண்டு, கிறிஸ்டோப் ஹென்ஸ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes