Sports17 May 2013

கங்குலி கடுமை

இந்தியன் பிரிமியர் லீக் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா மற்றும் அங்கிட் சவான் உள்ளிட்ட 11 பேரையும் ஐந்து நாள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்றைய தினம் இவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போதே நீதிபதி இந்த உத்தரவை விடுத்தார்.

இதனிடையே, இது தொடர்பில் இந்திய அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்த சம்வம் தொடர்பில் தாம் ஏமாற்றமும், கோபமும் அடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் எனவும் கங்குலி குறிப்பிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes