தேர்தல் சட்டங்களை மீறியதாக சட்டத்தின் முன் நிரூபணமான ஒரேயொரு அமைச்சரவை அமைச்சர் விமல் வீரவன்சவே என, கடுவெல நகர முதல்வர் பீ.எச். புத்ததாச தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இவருக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடுவெல மாநகர சபையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
விமல் வீரவன்ச தேர்தல் சட்டங்களை மீறியுள்ளார் என மனித உரிமை ஆணைக்குழு கூட ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2011ஆம் ஆண்டு கடுவெல மாநகர சபை தேர்தலில், அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட தரப்பினர் தேர்தல் சட்டங்களை மீறியதாக கடுவெல நகர முதல்வர் பீ.எச். புத்ததாச இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிட்டிருந்தார்.
கையேடு விநியோகித்தல் மற்றும் பேரணி; நடத்தப்பட்டமை ஆகிய தொடர்பான முறைப்பாடுகளே செய்யப்பட்டிருந்தன.
இந்த முறைப்பாட்டிற்கு அமைய தேர்தல் சட்டகளை மீறியுள்ளதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட தரப்பினர் அதில் கலந்து கொண்டிருந்ததாகவும் விசாரண அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இதற்கு அமைய குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றே ஏற்புடைய தீர்மான் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கடுவெல நகர முதல்வர் பீ.எச். புத்ததாச தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தாம் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக கடுவெல சுற்று வட்டத்தில் சாகும் வரையான உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Latest News
இந்திய வானூர்திப்படைக்கு சொந்தமான வானூர்தி விபத்து
Local
13 June 2026
நாட்டை மீண்டும் எங்களிடம் தாருங்கள், நடத்தி காண்பிப்போம் - மஹிந்த ராஜபக்ச சவால்!
Local
13 June 2026
பழங்குடியினரின் தலைவருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!
Local
13 June 2026
ஐந்து வயது மாணவியிடம் அத்துமீறியவர் கைது
Local
13 June 2026
களனிமுல்லையில் திருடப்பட்ட கொள்கலன் பாரவூர்தி அம்புல்கமவில் மீட்பு!
Local
13 June 2026
உலக வரலாற்றில் முதல் ட்ரில்லியனரானார் ஈலோன் மஸ்க்
Local
13 June 2026
சலேவைப் பார்க்க மனைவி இன்றும் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு: உணவுத் தவிர்ப்புப் போராட்டம் தொடர்கிறது!
Local
13 June 2026
நாட்டில் வேகமாக அதிகரிக்கும் டெங்கு: கொள்ளளவை மீறும் மருத்துவமனைகள்
Local
13 June 2026
குலம் சார்ந்த அரசியல் இன்றி சுரேஷ் சலேவுக்கு நீதியை நிலைநாட்டுங்கள்: முன்னாள் அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்
Local
13 June 2026
"அரசாங்கத்தின் தோல்விகளை மறைக்க ஊடக அடக்குமுறை!" அரசாங்கம் தோல்வியை மறைக்க ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் 35,000-ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களிலும், வாடகை வீடுகளிலும், கூடாரங்களிலும் மிகவும் அவலமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு, நிலையான வீடுகளை அமைத்துக் கொடுக்க அரசாங்கம் இதுவரை எவ்வித முறையான திட்டங்களையும் நடைமுறைப்படுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் தனது நிர்வாகத் தோல்விகளையும், பொய்களையும் மூடிமறைப்பதற்காக ஊடகங்களையும், மாற்றுக்கருத்துடையவர்களையும் ஒடுக்கும் அரசியல் ரீதியான அடக்குமுறைகளை கையாண்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் மற்றும் ஊழல்களின் சுமையை பொதுமக்கள் மீதே அரசாங்கம் சுமத்தி வருகின்றது. நாளுக்கு நாள் எரிபொருள் விலை மற்றும் வரிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றக் குழு கூட்டங்களின் போது அரசாங்கத்தின் நிதி முறைகேடுகள் அம்பலமாகின்ற போதிலும், அதற்கான தீர்வாக பொதுமக்கள் மீதே மேலும் வரிச்சுமைகள் சுமத்தப்படுவதாக அவர் விசனம் தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் உணவுத் தட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், உள்நாட்டு விவசாயிகளையும், உற்பத்தியாளர்களையும் வலுப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது. புதிய முதலீடுகளை ஈர்க்கவோ அல்லது புதிய தொழிற்சாலைகளை உருவாக்கவோ முடியாத நிலையில் தற்போதைய நிர்வாகம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தின் இத்தகைய திட்டமிடப்படாத, தன்னிச்சையான அரசியல் செயல்பாடுகளினால் நாட்டின் எதிர்காலம் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பெரும் கேள்விக்குறியாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Local
13 June 2026