General20 May 2013

காரைக்கால் மீனவர்களை விடுதலை

இலங்கையின் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 26 தென்னிந்திய காரைக்காலைச் சேர்ந்த மீனவர்களை விடுவிப்பதற்கான உத்தரவு இலங்கை அதிகாரிகளினால் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் மற்றும் சில அரசியல் கட்சிகளினால் இவர்களின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல போராட்டங்கள் இடம்பெற்றன.

இந்த நிலையில் மீனவர்களது விடுதலை குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை  நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்படுவார்கள் என்று இந்திய மத்திய அமைச்சர் வீ.நாராயணசுவாமி தெரிவித்திருந்தார்.

வெளிவிவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் இலங்கையில் உள்ள உயர்ஸ்தானிகரகத்திற்கு இடையில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes