General22 May 2013

அசோக் கே. காந்தா ஒப்புதல்

 

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா தோல்வி கண்டுள்ளது எனவும் இதனை தான் ஒப்புக்கொள்வதாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இடம்பெற்ற சந்திப்பொன்றில் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரான அசோக் கே.காந்தா, இந்திய வெளிவிவகார அமைச்சின் கிழக்கு ஆசிய பிரிவுக்கான செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் விரைவில் இலங்கையை விட்டுச் செல்லவுள்ளார். 

இந்த நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related recommendation
Hiru TV News | Programmes