General26 April 2019

Update :- சாய்ந்தமருதில் மூன்று வெடிப்பு சம்பவங்கள்! - பாதுகாப்பு படையுடன் துப்பாக்கிச் சண்டை (காணொளி)

கல்முனை சாய்ந்தமருது பகுதியில் தற்போது பாதுகாப்பு தரப்பினருக்கும், குழு ஒன்றுக்கும் இடையில் துப்பாக்கி சண்டை இடம்பெற்று வருகிறது.

அங்கு சுற்றிவளைப்பு சோதனையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு தரப்புக்கும், அடையாளம் தெரியாத குழு ஒன்றுக்கும் இடையில் இந்த மோதல் இடம்பெற்றுவருவதாக காவற்துறை ஊடக பேச்சாளர் , காவற்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதன்போது , பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் , மூன்று வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

குறித்த வீட்டில் மறைந்திருக்கும் தற்கொலை குண்டுதாரிகள் குறித்த வெடிப்புக்களை மேற்கொண்டிருக்கக்கூடும் என பாதுகாப்பு படையினர் சந்தேகிக்கின்றனர். 



Related recommendation
Hiru TV News | Programmes