தற்போது நடைபெற்று வரும் தொடர் போராட்டம் குறித்து பாதுகாப்பு செயலாளரினால் அதிகாரபூர்வ அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அமைதியான முறையில் மேற்கொண்டு கலைந்துசெல்லும் போராட்டங்களை தாம் பாராட்டுவதாகவும், அவ்வாறல்லாமல் செயற்படும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலான பேராட்டங்களை ஒடுக்குவதற்கு முடியுமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைதிப் போராட்டம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போராட்டங்களில் தற்போது 2 குழுக்கள் செயற்படுகின்றமை அவதானிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு குழு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தி கலைந்து செல்வதையடுத்து, மற்றைய குழு திட்டமிட்ட வகையில் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கின்றமை தெரியவந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் அவசரகால நிலை அமுலில் உள்ள போதிலும் ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதனை அனுமதிக்க முடியும்.
எனினும், இந்த போராட்டங்களிடையே குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக வன்முறையை தோற்றுவித்து பொது சொத்துக்களுக்கு பங்கம் விளைவித்தல், அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு பிரிவினருக்கு இடையூறு விளைவிப்பதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆர்ப்பாட்டங்களை, படையினர் மற்றும் காவல்துறையினர் அவதானித்து வருகின்ற நிலையில், முறையற்ற விதத்தில் போராட்டங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க அவர்கள் பின்நிற்கப் போவதில்லை என பாதுகாப்பு செயலாளரின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Follow US

Most Viewed Stories