குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் காவல்துறையிடம் நீதிமன்றம் விளக்கம் கோரல்

Thursday, 16 June 2022 - 22:20

%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D
முல்லைத்தீவு - குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில், நீதிமன்றம் காவல்துறையிடம் விளக்கம் கோரியுள்ளது.

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டுத் தலமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் கடந்த 12 ஆம் திகதி, புத்தர் சிலை ஒன்றினை நிறுவுவதற்கும், அங்கு நீதிமன்ற கட்டளையை மீறி அமைக்கப்பட்ட விகாரையில் விசேட பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதைத் தொடர்ந்து அந்த முயற்சிகள் கைவிடப்பட்டிருந்தன.

இந்த நிலையில், குருந்தூர் மலை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் மற்றும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

குருந்தூர்மலை தொடர்பில் நீதிமன்ற கட்டளையை கருத்திற்கொள்ளாமல், அமைக்கப்பட்ட விகாரை தொடர்பிலும், காவல்துறையினர் தொடர்ச்சியாக இந்த வழக்கில் நீதிமன்றிற்கு வழங்கவேண்டிய அறிக்கைகளை வழங்காது, சட்டத்தை மீறிச் செயற்படுபவர்களுக்கு சார்பாகச் செயற்பட்டதையும், முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் நீதவானின் கவனத்திற்கு கொண்டுசென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அந்தவகையில், குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை அவதானித்த நீதவான், வழக்குத் தொடுனரான காவல்துறையினர் குருந்தூர்மலையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு விசாரணையை திகதியிட்டுள்ளார்.

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகம் சார்பாக நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளில் ஒருவரான எஸ்.தனஞ்சயன், இதனைத் தெரிவித்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips