சிவனொளிபாத மலைக்கு யாத்திரிகர்கள் வருகை கணிசமாக குறைந்துள்ளது!

Sunday, 19 March 2023 - 14:03

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81%21
சிவனொளிபாதமலையை சூழவுள்ள வீதிகளில் உள்ள கடைகளில் எடுக்கப்பட்ட உணவு மற்றும் நீர் மாதிரிகளின் அறிக்கை கிடைத்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.

உணவு மற்றும் நீர் மாதிரிகள் பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அதன் அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிஸ்டீரியா எனும் பாக்டீரியாவினால் பீடிக்கப்பட்டு சிவனொளிபாதமலைக்கு செல்லும் வீதியில் உணவகமொன்றை நடத்தி வந்த வெலிமடை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்ததையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை பொது சுகாதார பரிசோதகர்கள் அந்த உணவகத்திலிருந்து உணவு மற்றும் தண்ணீர் மாதிரிகளை எடுத்தனர்.

இதேவேளை, இந்த சம்பவத்துடன் ஹட்டன் - நல்லதண்ணியா வீதி ஊடாக சிவனொளிபாத மலைக்கு செல்லும் யாத்திரிகர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக வீதியின் இருபுறமும் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.


Exclusive Clips