களுத்துறையில் ஐந்து மாடி விடுதி கட்டடத்தில் இருந்து விழுந்து 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 4 பேர் மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை இன்று களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த பிரதான சந்தேகநபர், அவரின் சாரதியாக செயற்பட்டவர், சிறுமியின் நண்பி மற்றும் நண்பியின் காதலன் ஆகியோரே இவ்வாறு மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக குறித்த சந்தேகநபர்களை கடந்த 15ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த விடுதி உரிமையாளரின் மனைவி கடந்த 15ஆம் திகதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow US

Most Viewed Stories