டெங்கு நோய் பரவலை தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாகாண ஆளுநர்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக தொலைக்காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் மாகாண ஆளுநர்கள், மாகாண செயலாளர்கள், உள்ளூராட்சி ஆணையாளர்கள் மற்றும் உள்ளூராட்சி சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் கலந்துகொண்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்கள் ஊடாக நோய் கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார்.
Follow US






Most Viewed Stories