அலி சப்ரி ரஹீமை எம்.பி பதவியிலிருந்து நீக்க திட்டம் - மனோ கணேசன்

Friday, 26 May 2023 - 19:33

%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D
அலி சப்ரி ரஹீமை, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணையைக் கொண்டுவர, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்தப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு, இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

6 கோடி ரூபா பெறுமதியான, மூன்றரை கிலோ கிராம் தங்கத்தை, நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டுவந்த குற்றச்சாட்டில், முஸ்லிம் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகளால், கடந்த 23ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

அவரின் பயணப் பொதியில் இருந்து, 91 கைபேசிகளும் கைப்பற்றப்பட்டிருந்தன.

இது தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர், 7.5 மில்லியன் ரூபா அபாரதம் விதித்து அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்தநிலையில், அலி சப்ரி ரஹீமை, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க, கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips