அபுதாபி தீ விபத்தில் இலங்கை பெண் உயிரிழப்பு!

Friday, 26 May 2023 - 22:54

%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF++%E0%AE%A4%E0%AF%80+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் உள்ள விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

2021ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் பணிக்காக அபுதாபி சென்ற பெண்ணே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீவிபத்தின் போது மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மலேசியாவின் உள்ள உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடாக தகவல் கிடைத்துள்ளதாக காமினி செனரத் யாப்பா குறிப்பிட்டார்

அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வீட்டு வேலைக்காக மலேசியா சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories


Exclusive Clips