AK62 தோல்வியில் இருந்து நகர்ந்து பிரதீப்பை இயக்குகிறார் விக்கி!

Sunday, 19 March 2023 - 18:49

AK62+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%21
இயக்குனர் விக்னேஷ் சிவன் அண்மையில் அஜித் குமாரின் 62 ஆவது படத்தில் இயக்குநராக அறிவிக்கப்பட்டு, அதன் பின்னர் எழுந்த பல சர்ச்சைகளையடுத்து அதிலிருந்து வெளியேறினார்.

தற்போது, ​​விக்னேஷ் சிவன் அந்த அத்தியாயத்தை புறம் தள்ளி, தனது அடுத்த திட்டத்தில் இறங்கியுள்ளார்.

லவ் டுடே இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை முக்கிய கதாபாத்திரமாக கொண்டு விக்னேஷ் சிவன் தனது புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் ஊடாக தயாரிக்கவுள்ளார்.

தற்போது “பேச்சுகள் நடந்து வருகின்றன, ஆனால் அதிகாரபூர்வ ஒப்பந்தம் இன்னும் கையெழுத்திடப்படவில்லையென கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனத்தின் தகவல் தரப்புகள் தெரிவிக்கின்றன.

எச். வினோத் - கமல்ஹாசன் கூட்டணியில் தயாராகும் படத்துக்கு முன்னதாக இந்த படத்தின் தயாரிப்பு பணிகளில் குறித்த தயாரிப்பு நிறுவனம் தற்போது மும்முரமாக இருப்பதாக குறித்த தகவல் தரப்புகள் மேலும் தெரிவித்தன.

விக்னேஷ் சிவனின் இந்தப் படம் முற்றுமுழுதாக ஒரு கலகலப்பான படமாக இருக்கும் என்றும் இது அஜித்திற்காக அவர் எழுதிய கதை அல்ல என்றும் அறியமுடிகிறது.

இதற்கிடையில், பிரதீப் ரங்கநாதன் தனது அடுத்த இயக்கத்தில் ஒரே நேரத்தில் பணிபுரிகிறார். மேலும் அறிமுக இயக்குனர் மிதுன் இயக்கும் மற்றொரு படத்திலும் அவர் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







Exclusive Clips