யாசகர்களுக்கு உதவி பொருட்களை வழங்கிய விஜய் ஆண்டனி!

Thursday, 25 May 2023 - 14:53

%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%21
விஜய் ஆண்டனி இயக்கி நடித்திருந்த 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் கடந்த 19ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியான மூன்று நாட்களில் ரூ.10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள யாசகர்களுக்கு செருப்பு, போர்வை, பிளாஸ்டிக் விசிறி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய உதவிப்பொருட்களின் தொகை ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் விஜய் ஆண்டனி.

பின்னர் அவர்களுடன் செல்பி எடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த செல்பி புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.Exclusive Clips