60ஆவது வயதில் ஆஷிஷ் வித்யார்த்தி இரண்டாம் திருமணம்!

Thursday, 25 May 2023 - 20:51

60%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%21
பிரபல இந்திய நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி இரண்டாம் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரூபாலி பருவா என்பவரையே ஆஷிஷ் வித்யார்த்தி இன்று திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இவர்களின் திருமணம் எளிய முறையில் உறவினர்கள் முன்னிலையில் பதிவுத் திருமணமாக நடந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தனது 60ஆவது வயதில் இரண்டாவது திருமணம் குறித்து வித்யார்த்தி கூறும்போது, "எனது வாழ்வின் இந்த நிலையில் ரூபாலியை திருமணம் செய்திருப்பது அசாதாரணமான உணர்வினைத் தருகிறது. காலையில் நாங்கள் பதிவுத் திருமணம் செய்துகொண்டோம். அதனைத் தொடர்ந்து விருந்து நிகழ்வு நடந்தது” என்றார்.

தொடர்ந்து தனது ரசிகர்களுக்கான செய்தியாக, "சில வருடங்களுக்கு முன்பு சந்தித்துக் கொண்ட நாங்கள் இருவரும், எங்கள் உறவினை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்ல விரும்பினோம். ஆனாலும் எங்களின் திருமணம் சிறிய குடும்ப நிகழ்வாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்" என ஆஷிஷ் வித்யார்த்தி தெரிவித்துள்ளார்.

தேசிய விருது பெற்ற நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி முன்னாள் நடிகை சகுந்தலா பருவாவின் மகள் ரஜோஷி பருவாவை முதலாவதாக திருமணம் செய்திருந்தார்.

தமிழில் பெரும்பாலும் வில்லன் நடிகராக அறியப்படும் ஆஷிஷ் வித்யார்த்தி 11 மொழிகளில் 300க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் இவர் நடித்த கில்லி, தில் போன்றவை இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.Exclusive Clips