ஐபிஎல் நிறைவு விழாவில் பாடல் பாடும் ஜொனிடா காந்தி!

Friday, 26 May 2023 - 17:14

%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%21
16ஆவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்தத் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

பொதுவாக இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின ஆரம்ப நிகழ்வை போல, நிறைவு விழாவும் கோலாகலமாக செய்யப்படுவது வழக்கமான ஒன்றாக காணப்படுகின்றது.

இதன்படி, இந்த முறையும் ஐபிஎல் நிறைவு விழாவினை கோலாகலமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில், பிரபல பாடகி ஜொனிடா காந்தி பாடல் பாடவுள்ளார் என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இரண்டாவது தகுதிக்காண் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள சென்னை அணியும் 28ஆம் திகதி மோதும்.Exclusive Clips