இறுதிப் போட்டிக்கு தெரிவானது குஜராத் டைட்டன்ஸ்!

Friday, 26 May 2023 - 23:54

%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%21
இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதிகாண் போட்டியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின.

தீர்மானமிக்க இன்றைய போட்டி மழைக்காரணமாக சற்று தாமதமாகவே ஆரம்பமானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மா முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.

இதற்கமைய, முதலில் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 03 விக்கெட்டுக்களை இழந்து 233 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக சுப்மன் கில் 129 ஓட்டங்களையும், சாய் சுதர்சன் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

சுப்மன் கில் ஐபிஎல் போட்டிகளில் பெற்ற 03ஆவது சதம் இதுவாகும்.

இவர் 60 பந்துகளுக்கு முகங்கொடுத்து 07 நான்கு ஓட்டங்கள், 10 ஆறு ஓட்டங்கள் அடங்களாக இந்த சதத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பந்துவீச்சில் மும்பை அணியின் பியூஷ் சவ்லா 45 ஓட்டங்களுக்கு 01 விக்கெட்டை கைப்பற்றினார்.

இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 10 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், 234 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 171 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

இதனால், குஜராத் அணி 62 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

அணிசார்பில் அதிகபடியாக, சூர்யகுமார் யாதவ் 61 ஓட்டங்களையும், திலக் வர்மா 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் குஜராத் அணியின் மொஹம்மட் ஷமி 02 விக்கெட்டுக்களையும், மோகித் ஷர்மா 05 விக்கெட்டுக்களையும், ரஷித் கான் 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 07 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமைய,எதிர்வரும் 28ஆம் இடம்பெறவுள்ள இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் குஜராத் அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.







Exclusive Clips