யாழ்ப்பாண பல்கலைக்கழகம் வழமைக்கு

Friday, 29 July 2016 - 20:32

%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3+%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தை அடுத்து வெளியேறி இருந்த சிங்கள மாணவர்கள் மீள தமது கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கு யாழ்ப்பாணம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
உயர் கல்வி அமைச்சர் லக்ஷமன் கிரியல்ல மாணவர்களுக்கிடையேயான கருத்து முரண்பாட்டை நீக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் பீ ஜி ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
 
தற்போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ மற்றும் பொறியியல் துறை மாணவர்களின் வருகை வழமைக்கு திரும்பியுள்ளது.
 
அதேபோல விஞ்ஞான பீட மாணவர்களின் வருகையும் திருப்திகரமான நிலையில் உள்ளதாகவும் பீ ஜி ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை , யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் பணிநிறுத்தப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாக இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கை நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளதைக் கண்டித்தே இந்த பணிநிறுத்த போராட்டம் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்களால் மேற்கொள்ளப்படுகின்றது.
 
ஆர்ப்பாட்டக்காரர்கள் 7 கோரிக்கைகளை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips